வாட்ஸ்அப்பில் QR code பயன்படுத்துவது எப்படி? நம்பரை அனுப்ப ரொம்ப ஈசியான வழி!

First Published | Aug 14, 2024, 4:54 PM IST

வாட்ஸ்அப்பில் ஒவ்வொரு பயனருக்கும் ஏற்கனவே ஒரு QR குறியீடு இருக்கும். இதற்காக வேறு தளங்களில் உள்ள QR குறியீடு ஜெனரேட்டரைப் பயன்படுத்த வேண்டியதில்லை.

whatsapp qr code contact

வாட்ஸ்அப்பில் புதிய எண்களைச் சேர்ப்பது கடினமானதே இல்லை. அதை எளிமையாகச் செய்ய வாட்ஸ்அப் QR குறியீட்டைப் பயன்படுத்தலாம். வாட்ஸஅப் செயலியில் இந்த QR குறியீடு வசதி புதிய தொடர்பு எண்களைச் சேமிப்பதை சுலபமாக்கி இருக்கிறது.

whatsapp qr code contact

இது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமில்லாமல், வணிக ஈடுபாடுகளுக்கும் பொருந்தும். இது பிசினஸ் அக்கவுண்ட்டிலும் தொடர்பு எண்களைச் சேமிப்பதை மிகவும் எளிதாகவும் விரைவாகவும் செய்ய உதவுகிறது. இந்த வாட்ஸ்அப் QR குறியீட்டை எப்படி ஸ்கேன் செய்வது அல்லது எப்படிப் பகிர்வது என்று பார்க்கலாம்.

Tap to resize

whatsapp qr code contact

வாட்ஸ்அப்பில் ஒவ்வொரு பயனருக்கும் ஏற்கனவே ஒரு QR குறியீடு இருக்கும். இதற்காக வேறு தளங்களில் உள்ள QR குறியீடு ஜெனரேட்டரைப் பயன்படுத்த வேண்டியதில்லை.

whatsapp qr code contact

ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு மொபைலில் வாட்ஸ்அப் செயலியின் செட்டிங்ஸ் பகுதியில் உங்கள் பெயருக்கு அடுத்து சிறிய அளவில் ஒரு QR குறியீடு ஐகான் இருக்கும். அதை கிளிக் செய்தால் உங்கள் QR குறியீடு திரையில் தெரியும்.

whatsapp qr code contact

உங்கள் வாட்ஸ்அப் QR குறியீட்டைக் கண்டறிந்ததும், அதற்குக் கீழே உள்ள ஷேர் ஐகானைக் கிளிக் செய்து வாட்ஸ்அப், மின்னஞ்சல், போன்ற பல ஆப்ஷன்களில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்யவும். பிறகு வாட்ஸ்அப் QR குறியீட்டைப் பகிர விரும்பும் நபரின் எண்ணைத் தேர்ந்தெடுத்து, Send பட்டனை கிளிக் செய்து அனுப்பவும்.

Latest Videos

click me!