கூகுள் பே அடிக்கடி யூஸ் பண்றீங்களா? பண பரிவர்த்தனை பதிவுகளை டெலிட் பண்ண தெரிஞ்சுக்கோங்க!

First Published | Aug 12, 2024, 6:25 PM IST

பணப் பரிவர்த்தனைக்கு Google Pay செயலியை பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் உங்கள் கணக்கில் பதிவுசெய்யப்பட்ட பரிவர்த்தனை விவரங்களை, அதாவது பேமெண்ட் ஹிஸ்டரியை நீக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். 

Google Pay

நாட்டில் கரன்சி பயன்பாட்டைக் குறைப்பதில் UPI தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரும்பாலான நிதி பரிவர்த்தனைகள் UPI மூலம்தான் செய்யப்படுகின்றன. வங்கிகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை... எந்த நேரமானாலும் சரி... கையில் ஸ்மார்ட்போன் இருந்தால் போதும்... பணத்தை அனுப்ப முடியும்.

UPI Payment Apps

இந்த UPI சேவைகளின் பெயரைக் கேட்டாலே நம் நினைவுக்கு வருவது கூகுள் பே, ஃபோன் பே போன்ற பேமெண்ட் செயலிகள் தான். அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் வங்கிக் கணக்கு இருந்தால் அதிலிருந்து UPI மூலம் பணத்தைச் செலுத்துவது மிகவும் எளிது. நாட்டின் எந்த மூலையில் உள்ளவர்களுக்கும் நொடிப்பொழுதில் பணம் செலுத்தலாம். பணத்தைப் பெறவும் செய்யலாம்.

Latest Videos


Google Pay Transactions

கூகுள் பே (Google Pay) போன்ற பேமெண்ட் ஆப்ஸ் மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளின் விவரங்கள் செயலியில் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் சில பரிவர்த்தனை விவரங்களைத் தனிப்பட்ட முறையில் வைத்திருக்க விரும்புவோர், அவற்றை டெலிட் செய்யலாம். Google Pay செயலியில் பரிவர்த்தனை வரலாற்றை நீக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

UPI Transactions history

கூகுள் பே செட்டிங் பகுதியில் Privacy & Securtiy என்பதைக் கிளிக் செய்யவும். அதில் உள்ள Data & Personalization என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். அதில், ஹைலைட் செய்யப்பட்டுள்ள உங்கள் கூகுள் கணக்கை கிளிக் செய்யவும். இங்கு அனைத்து பரிவர்த்தனை விவரங்களையும் பார்க்கலாம். அதில் நீக்க விரும்பும் பரிவர்த்தனை விவரத்தை மட்டும் அழிக்கலாம். அல்லது முழுமையாக அனைத்து பரிவர்த்தனை விவரங்களையும் கூட நீக்கலாம்.

Google Pay transaction history

குறிப்பிட்ட கால வரம்புக்குள் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளை மொத்தமாக நீக்கும் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டிருக்கும். அனைத்தையும் நீக்க விரும்பினால், அதற்குரிய ஆப்ஷனை பயன்படுத்தலாம். இதன் மூலம், கூகுள் பே செயலியில் வேண்டாத பரிவர்த்தனை விவரங்களை நீக்கலாம்.

click me!