ஆதார் கார்டில் முகவரியை மாத்தணுமா? ஆன்லைனில் ஈசியாக பண்ணலாமே! வாங்க தெரிஞ்சுக்கலாம்!

First Published | Jul 30, 2024, 10:15 PM IST

ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவது கடினமான வேலையே இல்லை. ஆன்லைனில் மிக எளிதாகவே முகவரியை அப்டேட் செய்யலாம்.

இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையான ஆதார் கார்டு பல்வேறு தேவைகளுக்கு பயன்படுகிறது. அடையாளச் சான்று, முகவரி சான்று தேவைப்படும் இடங்களில் ஆதார் அட்டை பரவலாக ஏற்கப்படுகிறது. அரசுத் திட்டங்களில் பலன் அடையவும் ஆதார் அவசியமாக இருக்கிறது.

ஆதார் அட்டையில் எப்போதும் அனைத்து விவரங்களும் சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம். ஆதாரில் உள்ள தகவல்கள் ஏதாவது மாறியிருந்தால் அதை உடனடியாக திருத்திக்கொள்ள வேண்டும். வீடு மாறியவர்கள் அவர்களின் பழைய முகவரியை நீக்கிவிட்டு புதிய முகவரியை அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.

Tap to resize

ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவது கடினமான வேலையே இல்லை. ஆன்லைனில் மிக எளிதாகவே முகவரியை அப்டேட் செய்யலாம். அதற்கு அங்கீகரிக்கப்பட்ட முகவரி சான்று ஒன்றை அளிக்க வேண்டியிருக்கும்.

ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ்புக், ஓட்டுநர் உரிமம் (லைசன்ஸ்), அண்மையில் மின்சாரக் கட்டணம் செலுத்திய ரசீது, லேண்ட்லைன் தொலைபேசி கட்டணம் செலுத்திய பில், ஓய்வூதியதாரருக்கான அடையாள அட்டை, பள்ளி மாற்றறுச் சான்றிதழ் போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை ஆதாரமாகக் கொடுத்து முகவரியை மாற்றிக்கொள்ளலாம்.

How To Take Loan From Aadhaar Card

இந்த ஆவணங்களில் ஒன்றில் புதிய முகவரி இருந்தால், அதை சான்றாக்க வைத்துக்கொண்டு ஆதார் ஆணையத்தின் https://myaadhaar.uidai.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் சென்று முகவரியை அப்டேட் செய்யலாம்.

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP ஐ பயன்படுத்தி உள்ளே நுழைந்து, Address Update பகுதியில் உள்ள Update Aadhaar Online என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். பிறகு Process to Update Aadhaar என்பதை கிளிக் செய்து, புதிய முகவரியை டைப் செந்து சமர்ப்பிக்கலாம். 

ஆன்லைனில் முகவரியை மாற்றுவதற்கு செயலாக்கக் கட்டணமாக ரூ. 50 செலுத்த வேண்டியிருக்கும். முகவரியை புதுப்பித்த பிறகு சில நாட்கள் கழித்து புதிய ஆதார் கார்டை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

Latest Videos

click me!