என் பொண்டாட்டி கூட பழக்கத்தை விட்டுடு! எவ்வளவு சொல்லியும் கேட்காததால்! வீடு புகுந்த கணவரால் அலறிய திண்டுக்கல் ஸ்டாலின்!

Published : Oct 03, 2025, 02:56 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், கள்ளக்காதல் விவகாரம் காரணமாக ஸ்டாலின் என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டார். ஸ்டாலின் மற்றும் அவரது தந்தை பெரியசாமியை, பெண்ணின் கணவர் மற்றும் கூட்டாளிகள் வீடு புகுந்து தாக்கியதில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

PREV
14
கள்ளக்காதல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கொசவபட்டி தனுஷ்கோடி காலனியைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன். இவரது மனைவியுடன் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களது விவகாரம் கணவர் செந்தமிழ்ச்செல்வனுக்கு தெரிய வந்ததை அடுத்து ஆத்திரமடைந்தார். இந்நிலையில் இளைஞர் ஸ்டாலின் மற்றும் அவருடைய தந்தை பெரியசாமி ஆகிய இருவரும் வீட்டில் இருந்தபோது செந்தமிழ் செல்வன் மற்றும் அவருடைய மனைவியின் சகோதரர்களான மதன் குமார் மற்றும் நண்பர் பிரகாஷ் ராஜ் , பாலன் ஆகிய நான்கு பேரும் வீட்டுக்குள் புகுந்து உள்ளே இருந்த ஸ்டாலின் மற்றும் பெரியசாமியை பட்டாக்கத்திகளால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.

24
வீடு புகுந்து கொலை

இதில் ஸ்டாலினுக்கு கழுத்து மற்றும் கை உள்ளிட்ட பகுதியில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டது மட்டுமல்லாமல் தடுக்க முயன்ற ஸ்டாலின் தந்தை பெரியசாமிக்கும் சரமாரி வெட்டு விழுந்துள்ளது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் செந்தமிழ் செல்வன் மற்றும் கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

34
தந்தைக்கு வெட்டு

பின்னர் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அம்பிலிக்கை காவல்துறையினருக்கு இந்த சம்பந்தமாக தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் ஸ்டாலினை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் தந்தை பெரியசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்,

44
போலீஸ் கைது

இந்த சம்பவம் குறித்து தப்பியோடிய செந்தமிழ்ச்செல்வன் மதன்குமார், பிரகாஷ் ராஜ், பாலன் ஆகிய நான்கு பேரையும் ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தில் வீடு புகுந்து இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories