திரைக் கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? என்று விஜய்யை மனதில் வைத்து ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ரஜினி அளித்த பதில் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கட்சி நடிகர் விஜய்யின் தவெக. திமுகவையும், பாஜகவையும் விளாசி வரும் விஜய், திமுகவுக்கு நேரடி போட்டியே தவெக தான் என்று ஆணித்தரமாக எடுத்துரைத்து வருகிறார்.
26
விஜய்க்கு அலை அலையாக கூட்டம்
அண்மையில் தவெக மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தி முடித்தது. இதில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் திரண்டு ஆளும் கட்சியையும், ஆண்ட கட்சியையும் வாய் பிளக்க வைத்தனர். இதனைத் தொடர்ந்து விஜய் நேரடியாக மக்களை சந்திக்க தொடங்கியுள்ளார். கடந்த வாரம் திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கிய அவர், சனிக்கிழமைதோறும் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். திருச்சியில் விஜய் பேசியபோது கூடிய கூட்டத்தால் ஒட்டுமொத்த நகரமே குலுங்கியது.
36
கூட்டம் வாக்குகளாக மாறுமா?
விஜய் எங்கு சென்றாலும் அவரது ரசிகர்களும், தவெக தொண்டர்களும் அலை அலையாக திரண்டு வரும் நிலையில், இந்த கூட்டம் வாக்குகளாக மாறுமா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. பொதுவாக நடிகர்கள், பிரபலங்கள் பொது வெளிக்கு வந்தாலே அவரை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் கூட்டம் வருவது இயல்பு. ஆனால் அது வாக்குகளாக மாறாது. விஜய் விஷயத்திலும் இதுதான் நடக்கும் என்று திமுகவினர், நாம் தமிழர் கட்சியினர் கூறுகின்றனர்.
எம்.ஜி.ஆர், விஜயகாந்த் கதை வேறு. இருவருக்கும் கூடிய கூட்டம் வாக்குகளாக மாறியதற்கு அவர்கள் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்ததே காரணம் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்களிடம அவரிடம் திரைக் கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? என்று கேள்வி எழுப்பினர்கள்.
56
ரஜினி பதிலால் தவெகவினர் ஷாக்
அதாவது விஜய்க்கு கூடும் கூட்டம் அவருக்கு வாக்குகளை பெற்றுத் தருமா? என மறைமுகமாக குறிப்பிடும் வகையில் செய்தியாளர்கள் இந்த கேள்வியை முன்வைத்தனர். இதனை சற்றும் எதிர்பாராத ரஜினிகாந்த், 'நோ கமெண்ட்ஸ்' (எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை) என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். ரஜினியை பொறுத்தவரை மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசக்கூடியவர். ஆனால் அவர் விஜய் குறித்த கேள்விக்கு எந்தவித பதிலும் சொல்லாமல் சென்றது தவெகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
66
விஜய் மீது அதிருப்தியில் ரஜினி
சினிமாவில் ரஜினிக்கும், விஜய்க்கும் ஏழாம் பொருத்தம் என்பது அனைவருக்கும் தெரியும். ரஜினியை ரோல் மாடலாக ஏற்றுக்கொண்டு சினிமாவில் வளர்ந்த விஜய், பின்பு சூப்பர் ஸ்டார் பட்டத்தை பறிக்க முயன்றதை ரஜினி ரசிக்கவில்லை. விஜய் மீது கொண்ட அதிருப்தியால் தான் அண்மையில் இளையராஜா பாராட்டு விழாவில் திமுகவுக்கு ஆதரவாக பேசிய ரஜினி, புதிய எதிரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சவாலாக விளங்குவார் என்று தவெகவினர் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக குறிப்பிட்டார்.
விமர்சிக்கும் ரஜினி ரசிகர்கள்
தன்னை கடுமையாக விமர்சித்த சீமானை கூட மன்னித்த ரஜினி வீட்டுக்கு வரவழைத்து அவரை சந்தித்தார். ஆனால் விஜய் மீதான ரஜினியின் அதிருப்தி என்றும் போகாது என ரஜினி ரசிகர்கள் கூறுகின்றனர். இதனால் தான் ஒருபக்கம் ரஜினி ரசிகர்கள், மறுபக்கம் அஜித் ரசிகர்கள் என விஜய்யின் அரசியலை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.