Pongal Festival
ஒவ்வொரு ஆண்டு பொங்கல் பண்டிகையின் போதும் பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பான ரொக்கம் ரூ.1000 வழங்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். எதிர்பார்த்த படியே பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
Pongal Gift
அதில், 2025-ம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த ரூ.1000 இடம் பெறவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தது மட்டுமல்லாமல் அரசு மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: செம ஹேப்பியில் பள்ளி மாணவர்கள்! இந்த மாவட்டங்களுக்கு 8 நாட்கள் பொங்கல் விடுமுறை!
Thangam Thennarasu
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் மாரிமுத்து, பொங்கல் தொகுப்பு ரூ.1000 குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.
tamil nadu assembly
அதாவது பொங்கல் தொகுப்புக்காக தமிழ்நாடு அரசு ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ஒன்றிய அரசிடம் ரூ.37,000 கோடி கேட்கப்பட்டது. ஆனால், ரூ.276 கோடி மட்டுமே வழங்கியது. SSA திட்டத்தில் ரூ.2100 கோடியை ஒன்றிய அரசு இன்னும் விடுக்கவில்லை. இதனால், அந்த செலவுகள் மாநில அரசியின் நிதியில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாகவே பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 வழங்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.