ரேஷன் அட்டை தாரர்களுக்கு குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு!

First Published | Jan 9, 2025, 3:26 PM IST

பொங்கல் பரிசுத் தொகுப்பை விரைந்து வழங்கும் பொருட்டு, வெள்ளிக்கிழமை அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும். முதலமைச்சர் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கித் தொடங்கி வைத்தார். 

Pongal Festival

தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக 1000 ரூபாய், பச்சரிசி, சக்கரை மற்றும் முழுக்கரும்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில்  இந்த ஆண்டும் தமிழக அரசு ரூ.1000 வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது நிதிப்பாற்றாக்குறை காரணமாக  இந்த ஆண்டு ரூ.1000 வழங்கப்படவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆனால் முழு கரும்பு, பச்சரிசி மற்றும் சக்கரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Tamilnadu Government

அதன்படி வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள 37, 224 நியாய விலைக்கடைகளில் இன்று முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து நியாய விலைக்கடைகளும் நாளை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Ration Shop

இதுதொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பொங்கல் விழாவை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைந்து வழங்க ஏதுவாக நாளை (வெள்ளிக் கிழமை) அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும். 

pongal gift

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில், முதலமைச்சர் அவர்கள், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் சேர்த்து மொத்தம் 2,20,94,585 குடும்பஅட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றை வழங்க ஆணையிட்டுள்ளார். மேலும், பொங்கல் பரிசுடன் விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

CM Stalin

அதனடிப்படையில், இன்று சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை சின்ன மலையில் இயங்கும் நியாய விலைக் கடையில் முதலமைச்சர் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி துவக்கி வைத்ததையடுத்து, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

Civil Supplies & Consumer Protection Department

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக நாளை (வெள்ளிக்கிழமை) அனைத்து நியாய விலைக் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பினைப் பெற்றுப் பயனடையுமாறு அன்புடன கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!