11, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு! முக்கிய செய்தியை வெளியிட்ட அரசு தேர்வுகள் இயக்ககம்!

First Published | Jan 9, 2025, 2:31 PM IST

தமிழகத்தில் மார்ச் 3 முதல் ஏப்ரல் 15 வரை 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும். பிப்ரவரி 7 முதல் 21 வரை செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

School Student

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொதுத்தேர்வு மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெற்று வருகிறது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டிருந்தார்.

Public Exam

அதன்படி வரும் மார்ச் 3-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 5ம் தேதி முதல் மார்ச் 27-ம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வும்,  மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளில் உள்ள மொத்த பொதுத்தேர்வுகளையும் சேர்த்து 27 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.  மே 9ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், மே 19ம் தேதி 10 மற்றும் பிளஸ் 1 மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. 

Tap to resize

School Practical Exam

10, 11, 12 பொதுத்தேர்வுக்கு முன்னதாகவே செய்முறை தேர்வுகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

Directorate of Government Examinations

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 7ம் தேதி முதல் 14ம் தேதிக்குள் நடத்தி முடிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Practical Exam

அதேபோல், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை பிப்ரவரி 15ம் தேதி முதல், 21ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்முறை தேர்வுக்கான விதிமுறைகள் ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், அதனை பின்பற்றி தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும், மதிப்பெண்களை எவ்வாறு பங்கிட்டு வழங்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Latest Videos

click me!