Agri Krishnamurthy
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, போளூர் புறவழிச்சாலை இந்த ஆண்டு முடிக்கப்படுமா? எனவும், வேலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் செங்கம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை இணைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார்.
EV Velu
அதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, போளூர் புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைப்பெற்று வருவதாகவும், பணிகள் முடிந்த உடன் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு, சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
Chengam - Tiruvannamalai National Highway
வேலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் செங்கம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலைகளை மாநில அரசால் இணைக்க முடியாது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் இது குறித்து சமீபத்தில் வலியுறுத்தப்பட்டதன் விளைவாக, இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விரைவில் வேலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் செங்கம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் திட்டம் இந்த ஆண்டு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
Tamil Nadu Assembly
மேலும், 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கான கிராம சாலைகளை மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் மேம்படுத்தும் பணிகள் நடைப்பெற்று வருவதாகவும், அதில் 25 சதவீத பணிகள் மட்டுமே மீதமுள்ளது. அந்த பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவு பெறும் என தெரிவித்தார்.
Geetha Jeevan
அதேபோல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் அங்கன்வாடி மையங்கள் செயற்கை தொழில்நுட்ப வசதி மற்றும் எல்இடி திரை கொண்ட நவீன மையங்களாக மாற்றப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன், 5500 அங்கன்வாடி மையங்களில் LED டிவி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு 6500 புதிய அங்கன்வாடி கட்டங்கள் கட்டப்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்று பதில் அளித்தார்.