job opportunities
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு
நாள் தோறும் படித்த படிப்பிற்கு வேலை தேடி பல லட்சம் இளைஞர்கள் பல நிறுவனங்களில் ஏறி இறங்கி வருகிறார்கள். அதன் படி தனியார் துறை மூலம் வேலைவாய்ப்புகள் தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும் அரசு துறைகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தி அதில் தேர்வாகும் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது.
மேலும் வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களையும் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்து வருகிறது. வெளிநாடுகளில் வேலை என கூறி தொடர்ந்து பல லட்சங்களில் பணத்தை பெற்று மோசடி சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசே வெளிநாடுகளில் உள்ள வேலைவய்ப்பு ஊதியம் தொடர்பான சரியான விவரங்களை வெளியிட்டுள்ளது.
jobs
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு
இது தொடர்பாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐக்கிய அரபு அமீரகம், சார்ஜாவில் பணிபுரிய Marketing Engineer, Production Engineer, Machine Shop Turner, Milling machine Operator, Steel Structural Fabricator, Assistant Fabricators, Mechanical Helpers, Instrument Technicians, CNC Laser Cutter Machine Programmer cum operator, Heavy Duty Bus Driver Fork Lift Driver தேவைப்படுகிறார்கள்.
மாத சம்பளம் என்ன.?
Diploma in Mechanical Engineer மற்றும் ITI தேர்ச்சி பெற்று 6 வருட பணி அனுபவத்துடன் 30 முதல் 44 வயதுக்கு உட்பட்ட Marketing Engineer பணிக்கு ரூ. 64,000/-முதல் ரூ. 69,000/- வரை, Production Engineer 64,000/-, Machine Shop Tumer 40,000/-, Milling machine Operator 42,000/- Steel Structural Fabricator( Required Gulf Experience)55,000/ முதல் 50ஆயிரம் வரை Assistant Fabricators(Required Gulf Experience)34,000/-, Mechanical Helpers 27,000
jobs in uk
உணவு, இருப்பிடம்.?
Instrument Technicians55,000/-, CNC Laser Cutter Machine Programmer cum operator+ VMC + HMC Lathe Operator(Required Gulf Experience) 52,000/-, Heavy Duty Bus Driver51,000/- Fork Lift Driver (Dubai License) ரூ.40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் உணவு மற்றும் இருப்பிடம், வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400/- மட்டும் செலுத்தினால் போதும். மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் overnclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவர விண்ணப்பபடிவம். கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலினை 20.01.2025 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நேர்காணல் எப்போ.?
இப்பணிகளுக்கான நேர்காணல் 22.01.2025 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெறவுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் (Resume, Passport Original & Copy) Aadhar Copy & Photo ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்: கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை நிறுவனம் இணையதள ம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைப்பேசி எண் 044-22502267, whatsapp எண் 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.