வங்கி கணக்கில் திடீரென வந்த 1000 ரூபாய்.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் பெண்கள்

First Published | Jan 9, 2025, 9:02 AM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. மகளிர் உரிமைத் தொகை பெறும் குடும்பத் தலைவிகளுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே ₹1000 வழங்கப்பட்டுள்ளது.

Pongal Celebration

பொங்கல் கொண்டாட்டம்

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில்,  புத்தாடைகள் வாங்கவும், பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கவும் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 6 முதல் 9 நாட்கள் வரை விடுமுறை கிடைப்பதால் அரசு ஊழியர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை உற்சாகத்தில் உள்ளனர். பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த கிராமத்தில், சொந்த ஊரில் கொண்டாட புறப்பட தயாராகி வருகிறார்கள்.

pongal festivel

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புறப்படவுள்ளனர். இதற்காக சிறப்பு ரயில், பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்கப்படவுள்ளது. மக்கள் பெரிதும் எதிர்பார்த்த ஆயிரம் ரூபாய் பணம் தொடர்பாக எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. அதே நேரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சக்கரை மற்றும் முழு கரும்பு இன்று முதல் வழங்கப்படவுள்ளது.

Tap to resize

magalir urimai thogai

மகளிர் உரிமை தொகை

இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்துள்ளார். இந்தநிலையில் தமிழகத்தில் மகளிர் உதவி தொகையானது குடும்பத்தலைவிகளுக்கு மாதம், மாதம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அதில் 1 கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

magalir urimai thogai

முன் கூட்டியே வந்த மகளிர் உரிமை தொகை

அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 14 அல்லது 15 ஆம் தேதிகளில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி முன்கூட்டியே வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மகளிர் உதவி தொகை பெறும்க குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு ஆயிரம் ரூபாய் வழங்காத நிலையில் முன்கூட்டியே மகளிர் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வந்தது குடும்பத்தலைவிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
 

Latest Videos

click me!