விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.! வங்கி கணக்கில் 15,000 ரூபாய்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட வேளாண்மை துறை

First Published | Jan 9, 2025, 8:05 AM IST

விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். அந்த வகையில் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அதன் படி தற்போது விவசாயத்திற்கு தேவையான உபகரணங்கள் வாங்க மானியம் அல்லது பணம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Agriculture Farmer

விவசாயிகளுக்கான திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. அதன் படி மக்களுக்கு அடிப்படை தேவையாக இருப்பது உண்ண உணவாகும், அந்த வகையில் பயிர்கள், செடிகள் மூலம் அரிசி, காய்கறிகளை உற்பத்தி செய்பவர்களான விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் ரூ.4,366 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.  கரும்பு விவசாயிகளுக்கு ரூ.651 கோடியில் சிறப்பு ஊக்கத் தொகை,  விவசாயத்திற்கு ரூ.270 கோடி ரூபாயில் இயந்திரங்கள், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியம், குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
 

farmers

மின் மோட்டார் வாங்க மானியம்

இந்த நிலையில் விவசாயிகளுக்கு முக்கிய தேவையாக இருப்பது நீர் ஆதாரமாகும், மின் மோட்டார்கள் மூலமாக பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. அதன் படி பழைய திறன் குறைந்த பம்புசெட்டுகளை மாற்றி அமைக்க முடியாத நிலையில் உள்ள ஏழ்மையான சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் பம்புசெட்டுகள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பாக  வேளாண்மைப் பொறியியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய மின் மோட்டார் பம்புசெட்டுகளை வாங்க விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் அல்லது..

Tap to resize

agriculture

மின் மோட்டாருக்கு 15ஆயிரம் ரூபாய்

.மின்மோட்டார் பம்புசெட் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றுள் எது குறைவோ அத்தொகை மானியமாக அரசு வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன் பெற நுண்ணீர்ப் பாசன அமைப்பு தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் ஏற்கனவே அமைத்தவர்கள் அல்லது  அமைத்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகுதிகள், விண்ணப்பிக்க முறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தகுதிகள்

* சிறு, குறு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை

* 5 ஏக்கர் வரை நிலம் உள்ள அனைத்து வகையான விவசாயிகளுக்கும்

* அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மின் மோட்டார் 4 ஸ்டார் தரத்திற்கு குறையாமல் விவசாயிகள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு

* மின் இணைப்புடன் உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட கிணற்றிற்கு திறன் குறைந்த பழைய பம்பு செட்டுகளுக்கு மாற்றாக புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் பொருத்துவதற்கு

* கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் உள்ள கிராம விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
 

Agriculture Farmer 04

தொடர்புக்கு

தொலைபேசி எண்: 044 29515322

இமெயில் : aedcepmksy@gmail.com மேலும் உழவர் செயலியின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Latest Videos

click me!