கொட்டிக்கிடக்கும் வேலை.! இன்டர்வியூ போங்க பணி ஆணையை வாங்குங்க.! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

Published : Jan 09, 2025, 07:06 AM ISTUpdated : Jan 09, 2025, 10:06 AM IST

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜனவரி 10ஆம் தேதி நடைபெற உள்ளது. 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு பல்வேறு பணியிடங்கள் உள்ளன. 

PREV
15
கொட்டிக்கிடக்கும் வேலை.! இன்டர்வியூ போங்க பணி ஆணையை வாங்குங்க.! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
JOB ALERT

வேலை தேடும் இளைஞர்கள்

தமிழகத்தில் ஆண்டு தோறும் பல லட்சம் பேர் பள்ளி, ஐடிஐ, டிப்ளமோ, கல்லூரி என முடித்து வேலை தேடி வருகிறார்கள். அதில் ஒரு தரப்பினர் அரசு பணியை கனவாக கொண்டு வேலை தேடுகிறார்கள். இதற்காக இரவு, பகல் பாராமல் தேர்விற்கு தயாராகிறார்கள். இந்த இளைஞர்களுக்காக தமிழக அரசு சார்பாக இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறது.

மேலும் சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்காக பயிற்சிகள் வழங்கி கடனுதவிக்கான வழிகாட்டவும் செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக தனியார் நிறுவனகளோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படுகிறது.
 

25
job search

கொட்டிக்கிடக்கும் வேலை

அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை தொடங்கியுள்ளது. அதன் படி பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் உருவாகியுள்ளது. இதற்காக தமிழக அரசோடு இணைந்து வேலை வாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்து வருகிறது.

இதன் படி வருகிற ஜனவரி 10ஆம் தேதி (நாளை ) சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. 

35
job fair

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

இந்தநிலையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், விருதுநகர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து 10,01,2025 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 2.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சூலக்கரை, விருதுநகர் வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

45
job

சிறப்பு அம்சங்கள்

ADYAR ANANDHA BHAVAN, TVS SUNDHARAM BREAKLINE, AANAIMALAI TOYOTO, TTK HEALTH CARE போன்ற 20-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் இணைந்து காலிப்பணியிடங்களை நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்ட விண்ணப்பம் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பம் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. 

55
job fair tamilnadu

கல்வித்தகுதிகள்

8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல்,கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள்.

வயது வரம்பு

18 வயது முதல் 40 வயது வரை

இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வேலைவாய்ப்பு குறித்து அறிந்து www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories