செம ஹேப்பியில் பள்ளி மாணவர்கள்! இந்த மாவட்டங்களுக்கு 8 நாட்கள் பொங்கல் விடுமுறை!

First Published | Jan 8, 2025, 8:54 PM IST

இந்த மாவட்ட பள்ளிகளுக்கு பொங்கலுக்கு 8 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளதால் பள்ளி மாணவர்கள் குஷியில் துள்ளி குதிக்கின்றனர்.

School Student

விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை குஷி தான். அதுவும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சொல்லவா வேண்டும். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை பார்ப்போம். 

Pongal Holiday

அதன்படி தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு முதலில் ஜனவரி 14 செவ்வாய் கிழமை தை பொங்கல், ஜனவரி 15 புதன் கிழமை திருவள்ளுவர் தினம், ஜனவரி 16  வியாழன் கிழமை உழவர் திருநாள் என 3 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டது. இடையில் ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்தால் மறுநாள் சனி, ஞாயிறு வார விடுமுறை வந்துவிடும். ஆகையால் ஜனவரி 17ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தனர். 

Tap to resize

Local Holiday

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஜனவரி 17ம் தேதி விடுமுறை அறிவித்தார். இதனையடுத்து மொத்தம் 6 நாட்கள் தொடர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு மட்டும் 8 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளதால் பள்ளி மாணவர்கள் குஷியில் இருந்து வருகின்றனர். 

Cuddalore

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் திருவிழா ஜனவரி 13ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய அன்றைய தினம் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பிப்ரவரி 01-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Ramanathapuram

அதேபோல்  ராமநாதபுரம் மாவட்டத்தில் மரகத நடராஜர் சிலை அமைந்துள்ள பிரசித்தி பெற்ற உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு மாவட்டங்களுக்கும் மொத்தம் 8 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது. 

Latest Videos

click me!