சென்னையில் அமித்ஷா.! இபிஎஸ் முதல் குருமூர்த்தி வரை- இன்று யாரையெல்லாம் சந்திக்கிறார்.?

Published : Apr 11, 2025, 07:47 AM ISTUpdated : Apr 11, 2025, 07:50 AM IST

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. அமித்ஷா சென்னை வருகை தந்து எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவது குறித்து இழுபறி நீடிக்கிறது.

PREV
14
சென்னையில் அமித்ஷா.! இபிஎஸ் முதல் குருமூர்த்தி வரை- இன்று யாரையெல்லாம் சந்திக்கிறார்.?

Tamilnadu ADMK BJP alliance : தமிழக சட்டமன்ற தேர்தல் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் வெற்றிக்கான திட்டங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணி பலம் பொருந்திய கூட்டணியாக தொடர்ந்து வருகிறது. இதனால் திமுகவை எதிர்க்க போட்டிக்கு எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார்.

அந்த வகையில் நடிகர் விஜய்யின் தவெகவை  தங்கள் அணிக்கு இழுக்க திட்டமிட்டார். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் மீண்டும் பாஜகவோடு கூட்டணி அமைக்க முதற்கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்கள்.

24
ADMK BJP alliance

சென்னை வந்த அமித்ஷா

இதனையடுத்து இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்காக நேற்றிரவு சென்னை வந்த பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷாவிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து இன்று காலை அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பாஜக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்கடுத்து துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன், பாரிவேந்தர், ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திக்கவுள்ளார். 

34
Amit Shah EPS talks

ஒருங்கிணைந்த அதிமுக

இந்த சந்திப்பின் போது 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இணைந்து தேர்தலை சந்திப்பது தொடர்பாகவும், தொகுதி ஒதுக்கீடு தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒருங்கிணைந்த அதிமுக தான் வெற்றியை தரும் என பாஜக தரப்பில் உறுதியாக கூறப்படுகிறது.

எனவே பாஜக, அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை இணைக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால் இபிஎஸ் தரப்போ பாஜக கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்கு ஓகே சொல்லப்பட்டதாக தெரிகிறது.  ஆனால் அதிமுகவில் இணைக்க மாட்டோம் என உறுதியாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது
 

44
Tamil Nadu BJP state president Annamalai

அதிமுக- பாஜக தொகுதி பங்கீடு என்ன.?

எனவே இபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் வழங்க தொகுதி பங்கீட்டை பொறுத்தவரை பாஜக தரப்பு 50-50 என கேட்டுள்ளது. ஆனால் இபிஎஸ் தரப்போ 70-30 என்ற நிலையில் உள்ளது. எனவே இன்றைய பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு, கூட்டணி உடன்பாடு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மாற்றாக புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான விருப்ப மனு தாக்கல்  இன்று காலை தொடங்குகிறது. அந்த வகையில் இன்று மாலைக்குள் யார் புதிய தலைவர் என்ற தகவல் உறுதி செய்யப்படும். அந்த வகையில் நயினார் நாகேந்திரன் பெயர் முதலிடத்தில் உள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories