பாஜக மாநில தலைவர் தேர்தல்; நாளை விருப்பமனு தாக்கல், 12 ஆம் தேதி தேர்தல் அறிவிப்பு!

Published : Apr 10, 2025, 06:26 PM IST

BJP Tamil Nadu President Election : தமிழக பாஜக மாநில தலைவர் பதவிக்கான போட்டியிடுவதற்கான விருப்பமனு, விண்ணப்பித்தல், தலைவர் பதவிக்கான தகுதி, தேர்தல் நடைபெறும் தேதி குறித்து முக்கியமான அறிவிப்பை பாஜக வெளியிட்டுள்ளது.

PREV
16
பாஜக மாநில தலைவர் தேர்தல்; நாளை விருப்பமனு தாக்கல், 12 ஆம் தேதி தேர்தல் அறிவிப்பு!
BJP State President Election Date, BJP Tamilnadu President Election Nomination

BJP Tamil Nadu President Election : தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஆயத்த வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதோடு கூட்டணி குறித்து பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தான் தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தமிழக பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட இருப்பது தான். மேலும் மாநில தலைவர் பதவிக்கான தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அண்ணாமலை ஏற்கனவே கூறியிருந்த நிலையில் நயினார் நாகேந்திரன் தான் மாநில தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

26
Qualification for the Post of BJP State President, Annamalai

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியிருந்தார். இதே போன்று நயினார் நாகேந்திரனும் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. இதன் காரணமாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் என்று கூறப்பட்டது.

36
Tamil Nadu BJP chief K Annamalai

இந்த நிலையில் தான் இப்போது தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் அதற்கான தேர்தலும் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்மனு தாக்கல் குறித்து பாஜக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுவதற்கான விருப்பமனு வரவேற்கப்படுகிறது.

 

46
BJP Tamilnadu President Election

இந்த பதவிக்கான தேர்தலுக்கு விருப்பமனுக்கள் கட்சியின் இணையதளமான www.bjptn.com என்ற இணையதளத்திலிருந்து பதவிறக்கம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் நாளை 11ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையில் மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்பமனுவை மாநில தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், 12 ஆம் தேதி மாநில தலைவருக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

56
Nainar Nagendran, BJP Tamil Nadu president, BJP Tamil Nadu president post

மாநில தலைவருக்கான தேர்தலுக்கான தகுதி:

மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவர்கள் படிவம் F பூர்த்தி செய்ய வேண்டும். மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும். இவரை கட்சியில் தேர்வு செய்யப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் அவரிடம் இருந்து எழுத்து பூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரை வேண்டும்.

66
BJP State President Election Date, Annamalai

தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல்:

தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் E பூர்த்தி செய்ய வேண்டும். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன் மொழிய மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழிமொழிய வேண்டும் என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories