இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்

Published : Dec 05, 2025, 10:21 AM IST

வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதால், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 14 மாவட்டங்களில் காலை வரை மழை தொடரும்.

PREV
15
வடகிழக்கு பருவமழை

தென் கிழக்கு பருவமழையை விட தமிழகத்திற்கு அதிகப்படியான மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தமிழகம் முழுவதும் விடாமல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர் நிலைகளின் நீர் மட்டங்கள் கிடுகிடுவென உயர்ந்தது. பின்னர் நவம்பர் மாதம் தொடங்கியதை அடுத்து போதிய மழையில்லாமல் அவ்வப்போது ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்து வந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்ததை அடுத்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.

25
தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

இந்நிலையில் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

35
14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

இதனிடையே தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

45
டெல்டா வெதர்மேன்

இதுதொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: கீழைக்காற்றின் ஊடுருவல் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மாவட்டத்தின் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகி வருகிறது. இன்று தமிழகத்தில் நல்ல வெயில் வரும், வெயிலுக்கு இடையில் திடீரென மேகம் சூழ்ந்து மழை வரும். கடலோர மாவட்டங்களில் முற்பகல்/பிற்பகல் நேரத்திலும் மாலை/இரவு உள் மாவட்டங்களிலும் மழை எதிர்ப்பார்க்கலாம். சென்னையின் தெற்கு புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

55
பல பகுதிகளில் கனமழை

தெற்கு புறநகர் பகுதிகள் கடந்த இரண்டு நாட்களாக காத்திருந்த கனமழை இன்று காலை கிழக்கு காற்று ஈர்க்கப்பட்டு நல்ல மழை பெய்தது. குறுகிய நேரத்திலேயே பல பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பிடத்தக்க ஒரு மணி நேர மழை அளவுகள் (காலை 3:30 முதல் 4:30 வரை): பெரும்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்): 88 மி.மீ, சோழிங்கநல்லூர்: 60 மி.மீ, ஓக்கியம் துரைப்பாக்கம்: 50 மி.மீ, இவை உண்மையிலேயே நல்ல மழையாகும் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories