கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட மற்றும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் புதிதாக விண்ணப்பித்த தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். முதல்வர் மு.க. ஸ்டாலின் டிசம்பர் 12ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. இதனையடுத்து தேர்தலில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டு அவரவர் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.
25
விடுப்பட்டவர்களுக்கு மகளிர் உரிமை தொகை
சுமார் 1.15 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்தனர். மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் பல லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மகளிர் உரிமை கிடைக்காத பெண்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதேபோல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினினும் விடுப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக வழங்கப்படும் என திட்வடட்டமாக தெரிவித்தார்.
35
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
அதன்படி தமிழக அரசு சில விதிகளை தளர்த்தி இன்னும் அதிகமான மகளிருக்கு இந்த உரிமைத் தொகையை வழங்க திட்டமிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். அதில் பெரும்பாலும் மகளிர் உரிமைத் தொகை வேண்டி இந்த திட்டத்தில் விடுபட்ட பெண்கள் அளித்த மனுக்கள் தான் இருந்தன. அதாவது 28 லட்சத்திற்கும் அதிகமான மனுக்கள் இடம் பெற்றிருந்தன.
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை
புதிதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை வருவாய்த் துறையினர் தீவிரமாக களஆய்வு செய்து வந்த நிலையில் தங்களுக்கு எப்போது மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், விடுபட்ட மற்றும் புதிதாக விண்ணப்பித்த தகுதியுள்ள பெண்களுக்கு டிசம்பர் 15ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் டிசம்பர் 12ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
55
மகளிர் உரிமைத்தொகை இவர்களுக்கு கிடைக்காது
இதனிடையே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்காத பலரும் தற்போது மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெற கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்த 28 லட்சம் பேரின் மனுக்களை மட்டுமே அரசு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.