தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய அப்டேட்!

Published : Jul 24, 2025, 09:52 AM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும். 

PREV
14
அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார். உங்களுடன் ஸ்டாலின் முகாம் அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் சிலர் நீதிமன்றம் சென்று உள்ளார்கள். எது எப்படி இருந்தாலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நாங்கள் செயல்படுவோம். திட்டத்தின் பெயரை வைத்தும் சிலர் அரசியல் செய்து வருகிறார்கள் என விமர்சனம் செய்துள்ளார்.

24
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி எதையாவது பேச வேண்டும் என்பதற்காகவே பேசி வருகிறார். தேர்தல் பயத்தை திமுகவுக்கு கொண்டு வர வேண்டும் என முயற்சி செய்கிறார். ஆனால் அது எந்த இடத்திலும் எடுபடவில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்து வருகிறார். ஆனால் அவர்கள் அடுத்த நிமிடமே நிராகரித்து விடுகின்றனர். கட்சியில் சீனியர்கள் இருக்கும் போது உதயநிதிக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். உதயநிதி ஸ்டாலின் திமுகவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இளம் தலைவராக இருக்கிறார். எங்கள் கட்சியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி கவலைப்பட தேவையில்லை.

34
பொதுத்தேர்வு அட்டவணை

இன்னும் ஒரு வாரத்திற்குள் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த முறை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரையும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதி முதல் 27ம் தேதி வரையும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரையும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

44
மாணவர் சேர்க்கை 3.94 லட்சம் அதிகரிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான #DravidianModel அரசு செயல்படுத்தும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களின் பலனாக நேற்று வரையிலும் அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 3,94,016 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளார்கள் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories