யார் இந்த அமுதா ஐஏஎஸ்.?
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் ஆட்சியின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர். கடந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான் ஆட்சியின் போது டெல்லியில் பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். சில ஆண்டுகள் அங்கே பதவி விகித்து வந்த நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அமுதாவை மீண்டும் தமிழகப் பணிக்குக் கொண்டு வரும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியது.
Dheeraj Kumar : யார் இந்த தீரஜ் குமார்.? உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டதின் பின்னனி என்ன.?
MK Stalin and Amutha Ias
உள்துறை செயலாளராக அமுதா
இதனையடுத்து அவரை தமிழக ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அடுத்ததாக தமிழக சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் முக்கிய துறையான உள்துறை செயலாளராக அமுதாவை முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்தார். தனது நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் துறையின் காரணமாக முக்கியத்துவம் வழங்கினார். கடந்த ஒரு ஆண்டாக உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய உள்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
Amutha IAS
கள்ளக்குறிச்சி மரணம்
இந்தநிலையில் அமுதா ஐஏஎஸ் மாற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் முக்கிய பங்கு வகிக்கிறது. கள்ளச்சாராயம் விநியோகம் தொடர்பாக ஏற்கனவே காவல்துறை சார்பாக அமுதா ஐஏஎஸ்க்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் ஆனால் இந்த கடிதத்தை உள்துறை செயலாளர் கண்டு கொள்ளவில்லையென கூறப்படுகிறது. மேலும் தொடர் கொலைகள் திமுக அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை அதிகாரிகள் புகார்
இந்த நிலையில் தான் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை கமிஷனர் உள்ளிட்ட முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்தார். இதனையடுத்து தான் தற்போது உள்துறை செயலாளர் அமுதாவை மாற்றம் செய்த்தாக கூறப்படுகிறது.
மேலும் அமுதா ஐஏஎஸ்க்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து இல்லையென்றும் கூறப்படுகிறது. இதனால் அமுதா ஐஏஎஸ் மீது அதிகாரிகள் புகார் தெரிவித்ததாகவும் ஒரு தகவலும் போலீசார் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கிராமங்கள் மீது பார்வையைத் திருப்பும் முதல்வர் மு.க. ஸ்டாலின்... அமுதா ஐ.ஏ.எஸ்ஸை களமிறக்கிய பின்னணி.!