Rain Alert : குடையில்லாமல் வெளியே போகாதீங்க... 16 மாவட்டங்களில் மழை ஊத்தப்போகுதாம்.. வானிலை மையம் அலர்ட்

First Published Jul 17, 2024, 8:21 AM IST

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் கோவை மற்றும் நீலகரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி வரை 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Rain

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 19 ஜூலை வாக்கில் உருவாக வாய்ப்புள்ளது இதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  இன்று 17.07.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 

TN Rains

கன முதல் மிக கன மழை எச்சரிக்கை

மிக மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நாளை 18.07.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Latest Videos


Tamil Nadu Rain

சென்னை,புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tomato: ஒரே நாளில் கிடு,கிடுவென உயர்ந்த தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவா.?திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?
 

kerala rains

காலை 10 மணி வரை மழை எச்சரிக்கை

இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு,திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம்  ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!