தக்காளி விலை - அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்
சமையலுக்கு எந்த காய்கறிகளும் இல்லாமல் சமைத்து விடலாம் ஆனால் தக்காளி இல்லாத உணவு சமைப்பது இல்லத்தரசிகளுக்கு சிரமமான வேலை, அந்த வகையில் தக்காளி விலை உயர்வு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கர்நாடாக, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி விலை ஒரே நாளில் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெங்காயத்தின் விலை என்ன.?
அதே நேரத்தில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மற்ற காய்கறிகளின் விலையை பொறுத்தவரை, பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய்க்கும் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொத்தவரை விலை என்ன.?
பாகற்காய் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 30 முதல் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 75 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
vegetables
இஞ்சி விலை என்ன.?
இஞ்சி ஒரு கிலோ 130 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று இந்த ஏரியாவில் மட்டும் மின்தடை!