Music : மாதம் 2 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கலாம்.!ஒரு வருட படிப்பு-இசைத்துறையில் புதிய டிப்ளமோ அறிமுகம்

Published : Jul 16, 2024, 10:04 PM ISTUpdated : Jul 17, 2024, 07:28 AM IST

இசையோடு கலந்த புதிய டிப்ளமோ படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு திரைத்துறை மட்டுமின்றி 50க்கும் மேற்பட்ட துறைகளில் வேலைவாய்ப்பு குவிந்து கிடப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

PREV
15
Music : மாதம் 2 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கலாம்.!ஒரு வருட படிப்பு-இசைத்துறையில் புதிய டிப்ளமோ அறிமுகம்

இசைக்காக டிப்ளமோ படிப்பு

கல்வி துறையில் பல்வேறு புதிய படிப்புகள் மாணவர்களின் ஆர்வத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் இசையில் ஆர்வத்தோடு உள்ள இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இசையை நவீன தொழில்நுட்பத்துடன் கற்கும் புதிய பாடத்திட்டம்- லயோலா கல்லூரி  தொடங்கியுள்ளது.

உலகம்  தற்போது தொழில்நுட்ப ரீதியாக  பல்வேறு மாறுதல்களை சந்தித்து வருகிறது. இதன் தாக்கம் பல்வேறு துறைகளிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.  அதில் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வரும் துறையாக கல்வி மாறியுள்ளது. இந்த மாறுதலானது தற்போது இசை துறையிலும்  எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது. 

25

ஆர்வம் காட்டும் மாணவர்கள்

இத்தகைய இசையை நவீன தொழில்நுட்பத்துடன் கற்கும் புதிய பாடத்திட்டத்தை, கல்விக்கு புகழ்பெற்ற லயோலா கல்லூரி  தொடங்கியுள்ளது. இந்த படிப்பில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னை Loyola  I CAM College of  Engineering  and Technology மற்றும் Risaya Academy இணைந்து Sound  Engineering என்ற புதிய தொழில்நுட்ப டிப்ளமோ படிப்பை தொட்ங்கியுள்ளது.  இது குறித்து Risaya Academy-யின் முதன்மை அலுவலர் ரத்தீஷ் பாபு செய்தியாளர்களிடம் கூறும் போது, இசை உருவாக்கத்தில் தொடங்கி இசைக்குள் இருக்கும் மின்னணு தொழில் ட்பங்களை எப்படி பயன்படுத்துவது என்பது வரை இந்த படிப்பில் பாடத்திட்டங்களாக கற்பிக்கபடுகிறது.  
 

35

6 மாதம் முதல் 1வருட படிப்பு

இன்றைய இசை துறை  என்பது வெறும் இசை உருவாக்கமாக மட்டுமில்லாமல் டெக்னாலஜி பயன்பாடாகவும் மாறிவருகிறது.  இந்த பயிற்சியில் புதுமையான சவுண்டுகளின் உருவாக்கம், இசையை உருவாக்கும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை பயன்படுத்தும் முறைகள் மற்றும் Aquatics Designs,  Music Theropy,  Music products, Rhythms and  Final Mixing என இசையின் அனைத்து தொழில்நுட்பத்தையும் 12 பாடப்பிரிவுகளாக ஆறு மாதம் மற்றும் ஒரு வருட டிப்ளமோ படிப்பாக இணைந்து வழங்குகிறோம். 

45

கார்ப்ரேட் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

இந்த படிப்பில் சேர்ந்து படிக்கும் மாணவ, மாணவிகள், ஒரு வருட  Sound Engineering டிப்ளமோ  படிப்பை முடித்தவுடன் ஆஸ்திரேலியாவில் உள்ள JMC University -யில்  நேரடியாக இரண்டாம் ஆண்டின் பட்டப்படிப்பை  தொடரலாம். இசைத்துறையில் வழங்கும் Sound Engineering படிப்பு என்பது திரைத்துறையில் வேலை வாய்ப்பு மட்டுமின்றி பல்வேறு கார்பரேட் நிறுவனங்களிலும் இத்துறைக்கு அதிக வேலைவாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். 

TNPSC தேர்வுக்கு தயாராகுறீங்களா.? இலவச பயிற்சிக்கு தமிழக அரசு அழைப்பு-விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா?

55

மாதம் 2 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கலாம்

2 லட்சத்திற்கு மேல் ஸ்பீக்கர் தயாரிப்பு, சோசிலய்ல மீடியா சவுண்ட் செக்கிங், கேமிங் தொழில்நுட்பத்தில் சவுண்டு மிக்ஸ்சிங் வேலை, வளர்ந்து வரும் இசை தொழில்நுட்பத்தில் அக்வாஸ்டிக் துறைகளில் வேலைவாய்ப்பு என 50க்கும் மேற்பட்ட துறைகளில் வேலைகள் குவிந்து கிடப்பதாக தெரிவித்தார். இந்த படிப்பில் சிறந்த வல்லுநர்களாக செயல்பட்டால் மாதம்  2 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியும் என தெரிவித்தார். 

click me!

Recommended Stories