சென்னை ஏரிகளில் இவ்வளவு தான் நீர் இருப்பு இருக்கா.? வெளியான அதிர்ச்சி தகவல்

First Published | Nov 29, 2024, 1:13 PM IST

Water availability in Chennai lakes : வடகிழக்கு பருவமழை தமிழக குடிநீரின் முக்கிய ஆதாரம். மழை பொய்த்தால் சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்கும். தற்போதைய பருவமழை சென்னை நீர் ஆதாரங்களை நிரப்புமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

heavy rain in tamilnadu

வடகிழக்கு பருவமழை - குடிநீர் ஆதாரம்

வடகிழக்கு பருவமழை தான் தமிழகத்தின் குடிநீர் ஆதாரங்களுக்கு முக்கிய தேவையாக உள்ளது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரியான விகிதத்தில் பெய்து வருவதால் பெரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத நிலை உள்ளது. ஆனால் பருவமழை மட்டும் பெய்யாமல் ஏமாற்றினால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் பாடு திண்டாட்டம் ஆகிவிடும். அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு வேலூரில் இருந்து சென்னைக்கு ஒரு நாளில் நான்கு முறை சரக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டது.

WATER CHENNAI

மழைக்காக காத்திருக்கும் மக்கள்

ஜோலார்பேட்டையில் இருந்து  நாளொன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னைக்கு கொண்டுவரும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. மேலும் சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்த விவசாய கிணறுகளில் இருந்தும் குவாரிகளில் இருந்தும் தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.  

இது போன்ற நிலைமை இனி வராமல் இருக்க வேண்டும் என்றால் பருவமழை பெய்ய வேண்டும். ஆனால் தற்போதைய பருவமழை காலத்தில் மழையானது இன்னும் சரியாக பெய்யாமல் தான் உள்ளது. இதனால் சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் அதிகரிக்காமல் உள்ளது.
 

Tap to resize

Chembarambakkam

தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் நிலைமை மோசமாக உள்ளது. எனவே தற்போது உருவாகியுள்ள புயல் மூலம் தண்ணீர் கிடைத்தால் சற்று நீரின் அளவு அதிகரிக்கும். இன்னும் ஒரு மாதம் மட்டுமே வடகிழக்கு பருவமழை பெய்ய கூடிய சூழல் இருப்பதால் சென்னை மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலையை மழையானது உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

puzhal

ஏரிகளில் நீர் இருப்பு

அந்த வகையில் சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலைமை தற்போது பார்க்கலாம். அதன் படி, 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு தற்போது 2,355 மில்லியன் கனஅடியாக உள்ளது.  புழல் ஏரிக்கு நீர்வரத்து 255 கனஅடியில் இருந்து 232 கன அடியாக சரிந்துள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கனஅடியில் தற்போது நீர் இருப்பு  117 மில்லியன் கனஅடியாக உள்ளது.

CHENNAI DAM

சென்னை ஏரிகளில் 46% மட்டுமே நீர் இருப்பு

கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 301 மில்லியன் கனஅடியாக உள்ளது.  அந்த வகையில் சதவிகித அடிப்படையில்  செம்பரம்பாக்கத்தில் - 61.48%,  புழல் ஏரியில் - 71.36%,  பூண்டி - 15.81%, சோழவரம் - 10.82%, கண்ணன்கோட்டை - 60.2%, ஒட்டுமொத்தமாக  சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 46.99 சதவிகித நீர் இருப்பு மட்டுமே உள்ளது. இந்த நீர் மூலம் மார்ச் மாதம் வரை மட்டுமே குடிநீருக்காக நீர் வழங்க கூடிய சூழல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

Latest Videos

click me!