Vegetable Price : காய்கறி விலை நிலவரம் என்ன.? கோயம்பேட்டில் தக்காளி, கேரட் விலைக் கூடியதா குறைந்ததா.?

First Published Jul 22, 2024, 8:54 AM IST

கர்நாடகா, கேரளா,ஆந்திர மாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக காய்கறிகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்ததையடுத்து விற்பனை விலையானது அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் மழையின் தாக்கத்தை பொறுத்து காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்படலாம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

vegetables

காய்கறி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு  சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைந்ததையடுத்து விற்பனை விலையானது அதிகரித்து உள்ளது.  அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி  45 முதல் 60 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாயில் இருந்து 85 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 முதல் 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அவரைக்காய் விலை என்ன.?

வாழைப்பூ ஒரு கிலோ ரூ. 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனையாகிறது.

சூப்பர் மார்க்கெட், ரேஷன் கடைகளில் மதுபானம் விற்க அனுமதி வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் மனு

Latest Videos


vegetables

முருங்கைக்காய் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒன்று 30 முதல் 40 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 1 கிலோ 80 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இனி கட்டிடத்திற்கு அனுமதி வாங்க அரசு அலுவலகத்திற்கு அலையவேண்டியதில்லை.. விண்ணப்பிக்க புதிய லிங்க் அறிமுகம்

இஞ்சி விலை என்ன.?

இஞ்சி ஒரு கிலோ 130ரூபாய்க்கும்,  மாங்காய் ஒரு கிலோ 50-க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்  சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
 

click me!