ஒரு கிலோ இஞ்சி 290 ரூபாய்..! தக்காளி, வெங்காயத்தின் விலை அதிகரித்ததா? கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?

Published : Sep 28, 2023, 08:21 AM IST

சமையலுக்கு முக்கியதேவையான காய்கறிகள் கோயம்பேடு சந்தையில் இருந்து சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டுகிறது. அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் வெங்காயம் மற்றும் இஞ்சியின் விலையானது அதிகரித்துள்ளது.  

PREV
13
ஒரு கிலோ இஞ்சி 290 ரூபாய்..! தக்காளி, வெங்காயத்தின் விலை அதிகரித்ததா? கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?

காய்கறி விலை நிலவரம்

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகளின் வர்த்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 34 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 89 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

23
Vegetables to include in your daily diet in winters

கத்தரிக்காய் விலை என்ன.?

குடைமிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கேரட் ஒரு கிலோ 30 ரூபாய், கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ அறுபது ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

33
Vegetable

உச்சத்தில் இஞ்சி விலை

கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து விலை வரும் தக்காளியானது ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  அதே நேரத்தில் இஞ்சியின் விலையானது தரத்தை பொறுத்து மாற்றம் செய்யப்படுகிறது. ஒரு கிலோ இஞ்சி 200 ரூபாய் முதல் 290 ரூபாய் வரை விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்

இனி கவலை வேண்டாம்.. சென்னை கோடம்பாக்கம் டூ போரூர் சாலையில் பயணிப்போருக்கு குட்நியூஸ்.!

click me!

Recommended Stories