வெறித்தனமான மழை காத்திருக்கு.. 3 நாட்களுக்கு தொடரும் - வெதர்மேன் கொடுத்த அலெர்ட்.. முழு விபரம் இதோ !!

Published : Sep 27, 2023, 06:19 PM ISTUpdated : Sep 27, 2023, 08:48 PM IST

தென்மேற்கு பருவமழை வட தமிழகப் பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் முக்கிய வானிலை அப்டேட்டை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.

PREV
15
வெறித்தனமான மழை காத்திருக்கு.. 3 நாட்களுக்கு தொடரும் - வெதர்மேன் கொடுத்த அலெர்ட்.. முழு விபரம் இதோ !!
Tamilnadu Weather

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

25
Tamilnadu Weather Update

தென்மேற்கு பருவமழை வடதமிழகத்தில் தீவிரமடைந்துள்ளதால் மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டி பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

35
Tamil nadu rains

மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடும் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

45
chennai rains

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணாநகர் மேற்குப் பகுதியில் 52 மி.மீ. வெறித்தனமான மழை இன்று மட்டுமல்ல, அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழக மாவட்டத்திற்கு மிகவும் நன்றாக இருக்கிறது.

55
Tamil Nadu Weatherman Pradeep John

பூண்டிக்கு நீர்வரத்து 2500 கனஅடியாக உள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கும் பருவமழை இருக்கிறது” என்று வானிலை அப்டேட் கொடுத்துள்ளார்.

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories