Vegetables Price List : மீண்டும் குறைந்ததா காய்கறிகளின் விலை.? ஒரு கிலோ தக்காளி, கேரட், பீன்ஸ் விலை என்ன.?

First Published | Jun 7, 2024, 8:31 AM IST

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு சென்னை கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை காரணமாக காய்கறிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது காய்கறிகளின் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து விற்பனை விலை சற்று குறைந்து வருகிறது. . 

Vegetables Price Koyembedu

பீன்ஸ் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், உச்சத்தில் நீடித்த பீன்ஸ் தற்போது ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Vegetables Price Today

பீட்ரூட் விலை என்ன.?

அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Latest Videos


vegetables

இஞ்சி விலை நிலவரம் என்ன.?

பாகற்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், சௌசௌ ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

மாங்காய் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், மாங்காய்  ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும்  விற்பனை ஆகிறது

click me!