Published : Feb 02, 2025, 01:52 PM ISTUpdated : Feb 02, 2025, 03:13 PM IST
ஈசிஆரில் பெண் மருத்துவரை காரில் துரத்திய வழக்கில் கைதான சந்துரு, தனது வாக்குமூலத்தில் சம்பவம் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார். சந்தோஷ் என்பவர் காரை இடித்து விட்டு சென்றதாக கூறியதால் துரத்தியதாகவும், டோல்கேட்டில் பணம் வசூலிப்பதை தவிர்ப்பதற்காகவே காரில் கொடியை அணிந்து சென்றதாகவும் கூறியுள்ளார்.
ஈசிஆரில் கடந்த 25ம் தேதி நள்ளிரவு பெண் மருத்துவர் ஒருவர் குடும்பத்துடன் முட்டுக்காடு பகுதிக்கு காரில் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே நின்றிருந்த இரண்டு கார்களில் இருந்த இளைஞர்களின் பெண் மருத்துவர் சென்ற காரை பின் தொடர்ந்து சென்றனர். இதனால் பதற்ற மடைந்த பெண் மருத்துவர் கதறி துடித்தார்.
இருந்த போதும் திமுக கொடி பொருத்திய கார் மற்றும் தார் கார் என இரண்டு கார்களில் பின் தொடர்ந்து வீடு வரை துரத்திச் சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் இரண்டு கார்களை வைத்து மடக்கி கார் கண்ணாடியை தட்டி அச்சுறுத்தினர். பின்னர் காவல்துறையினரிடம் சொல்லி இருப்பதாக சொன்னவுடன் 8 இளைஞர்களும் தப்பிச் சென்றதாக கூறப்பட்டது.
25
6 பேர் கைது- 5 பிரிவில் வழக்கு
இது தொடரான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் கானத்தூர் போலீசார் பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கில் முக்கிய நபரான சந்துரு நடந்தது என்ன என வீடியோ மூலம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், இசிஆர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்துரு கூறுகையில், டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ளேன்
35
ஈசிஆரில் பெண்கள் சென்ற காரை மடக்கியது நான் தான்
ஏற்கனவே மொபைல் ஷாப் வைத்திருந்தேன். அதில் ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட்டால் அப்போதும் ஒரு முறை சிறைக்கு சென்றேன். இதனையடுத்து கார், பைக் விற்பனை செய்து வந்தேன் அப்போது கடத்தல் வழக்கு ஒன்றிலும் எனது பெயர் சிக்கியது. இதன் காரணமாக சிறைக்கு செல்ல நேரிட்டது.
ஈசிஆர் சம்பவத்தின் போது காரை ஓட்டிச் சென்றது பெண்களை மடக்கிது எல்லாமே நான்தான். சந்தோஷ் என்பவர் சொன்னதன் காரணமாகவே காரை துரத்தினோம். கார் இடித்து விட்டு சென்றதாக சந்தோஷ் தெரிவித்தார். காரை இடித்ததை நான் கண்ணால் கூட பார்க்கவில்லை. காரை இடித்து விட்டார்கள் ,
45
காரை விரட்டியது ஏன்.?
வண்டியை பிடி எனக் கூறினார்கள். அதனால் தான் காரை பின் தொடர்ந்தேன். காரை முன் நின்று மறித்தேன். ஆனால் அவர்கள் நிற்க மாட்டேன் என்று புறப்பட்டு விட்டார்கள். அப்போதுதான் அவர்கள் வீடியோ எடுத்தார்கள். தொடர்ந்து அவர்கள் தங்கள் வீட்டிற்கு திரும்பி விட்டார்கள் வீட்டிற்குள் சென்று சந்தோஷ் பேசினார். அதற்குப் பின்பாக நான் பிடிக்கச் சொன்ன கார் இது இல்லை என கூறினார்.
55
காரில் திமுக கொடி.?
என்னை மன்னிப்பு கேட்க சொன்னார். நானும் மன்னிப்பு கேட்டேன். போலீசிடம் செல்வதாக கூறினார்கள். போலீஸ் வந்தால் எங்கள் என்னை கொடுங்கள் என்று கூறிவிட்டு நாங்கள் சென்று விட்டோம். நான் எந்த கட்சியிலும் இல்லை. எங்க வீடடில் எங்க தாத்தாவும், எங்க அம்மா கூட பிறந்த அண்ணனும் அதிமுகவில் தான் இருக்காங்க.
எங்கள் தாத்தா எம்ஜிஆரிடம் டிரைவராக இருந்துள்ளார். எங்களுடன் காரில் வந்த மற்றவர்களை எனக்கு தெரியாது. இரண்டு நபர்கள் மட்டுமே இரண்டு முறை பார்த்து உள்ளேன். டோல்கேட்டில் பணம் வசூலிப்பதை தவிர்ப்பதற்காகவே காரில் கொடியை அணிந்து சென்றதாகவும் சந்துரு வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.