2025 நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14 அன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 9250 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன் மருத்துவ கலந்தாய்வு தொடங்கும்.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், ஆயுர்வேதம், யுனானி, சித்தா போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வில் தகுதி பெறுவது அவசியம். அந்த வகையில் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) மே 4 நாடு முழுவதும் நடைபெற்றது.
கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நீட் தேர்வை இந்தாண்டு நாடு முழுவதும் 22 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தேர்வு எழுதினார். இந்த நிலையில் நீட் தேர்வு 2025 முடிவு ஜூன் 14 அன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
25
தமிழகத்தில் எம்பிபிஎஸ் இடங்கள்.?
நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது வெளியிடப்படும். எனவே நீட் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்துள்ளனர். எம்.பி.பி.எஸ் இடங்களைப் பெற கடும் போட்டி நிலவுகிறது. குறைந்த கட்டணம் காரணமாக அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் பெற மாணவர்கள் தீவிரமாக முயற்சிக்கின்றனர்.
எனவே நீட் தேர்வு முடிவு வந்த உடன் மருத்துவ கலந்தாய்வு தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி உட்பட 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளது.
35
மருத்துவ கலந்தாய்வு - காத்திருக்கும் அரசு
இது மட்டுமில்லாமல் 22 தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் 4 தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்கள் என 4050 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 9250 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. எனவே நீட் தேர்வு முடிவுகள் வந்த உடன் தமிழக அரசு மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிக்கவுள்ளது. இந்த கலந்தாய்வில் மாணவர்கள் என்ன.? என்ன ஆவணங்கள் கொண்டு வரவேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.
7.5% இடஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் (தேவைப்படின்) தகுதிச் சான்றிதழ் (தேவைப்படின்) மொழி அல்லது மத சிறுபான்மை சான்றிதழ் (தேவைப்படின்) எனவே மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ள மாணவர்கள் இந்த சான்றிதழ்கள் இல்லையென்றால் உடனடியாக விண்ணப்பித்து கைவசம் வைத்துக்கொள்வது முக்கியமாகும்.