இரண்டு நாட்கள் விடுமுறை! மாணவர்களுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் போக்குவரத்துறை கொடுத்த இன்ப அதிர்ச்சி!

Published : Mar 21, 2025, 07:38 AM ISTUpdated : Mar 21, 2025, 07:42 AM IST

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

PREV
16
இரண்டு நாட்கள் விடுமுறை! மாணவர்களுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் போக்குவரத்துறை கொடுத்த இன்ப அதிர்ச்சி!
Tamil Nadu government transport

ஒவ்வொரு வார இறுதி நாட்களை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் சனி, ஞாயிறு அதாவது வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மார்ச் 21ம் தேதி வெள்ளிக்கிழமை, மார்ச் 22ம் சனிக்கிழமை, மார்ச் 23ம் தேதி ஞாயிறு வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

26
weekend special buses

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்குமார்ச் 21ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 270 பேருந்துகளும்,  மார்ச் 22ம் சனிக்கிழமை 275 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? இதோ நியூ அப்டேட்!

36
Government bus

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மார்ச் 21ம் தேதி வெள்ளிக் கிழமை மற்றும் ம் மார்ச் 22ம் தேதி சனிக்கிழமை அன்று 51 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாதாவரத்திலிருந்து மார்ச் 21ம் மற்றும் 22ம் தேதியன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

46
SETC

மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  போக்குவரத்து கழகத்தில் 3724 காலிப்பணியிடம்.! 10 ஆம் வகுப்பு படித்தாலே போதும்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு

56
special bus booking

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7,345 பயணிகளும் சனிக்கிழமை 2,900 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,435 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

66
TN Government Bus

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories