இரண்டு நாட்கள் விடுமுறை! பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன போக்குவரத்துறை!

Published : Feb 19, 2026, 11:24 AM IST

Special Bus: சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, குமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய இடங்களுக்கு நாளை முதல் 240 பேருந்துகள் இயக்கம்.

PREV
15
சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

தமிழகத்தில் சுப முகூர்த்தம், தொடர் விடுமுறை, பவுர்ணமி, அமாவாசை மற்றும் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பேருந்துகள் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் ஒரு சில நேரங்களில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் போக்குவரத்துறை சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

25
அரசு போக்குவரத்து கழகம்

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பிப்ரவரி 20ம் தேதியான நாளை (வெள்ளிக்கிழமை) பிப்ரவரி 21 (சனிக்கிழமை) மற்றும் பிப்ரவரி 22 (ஞாயிறுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

35
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை முதல் 240 பேருந்துகளும், பிப்ரவரி 07ம் தேதி (சனிக்கிழமை) 255 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

45
கோயம்பேடு - பெங்களூரு சிறப்பு பேருந்து

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை 55 பேருந்துகளும், பிப்ரவரி 21 சனிக்கிழமை 55 பேருந்துகளும் என இயக்கப்பட உள்ளது. மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

55
Mobile App மூலம் முன்பதிவு

மாதாவரத்திலிருந்து நாளை வெள்ளிக்கிழமை மற்றும் பிப்ரவரி 21 தேதி சனிக்கிழமை ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories