வெதர்மேன் சொன்ன மாதிரியே வெளுத்து வாங்கிய கோடை மழை! இன்றும் தரமான சம்பவம் இருக்கா? இதோ குளு குளு அப்டேட்

Published : Mar 19, 2026, 09:37 AM IST

ஜெர் ஸ்ட்ரீமில் ஏற்படும் வளைவு காரணமாக மார்ச் 20 வரை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது உள் மாவட்டப் பகுதி முழுவதும் பரவியிருப்பதால் குறிப்பிட்ட மாவட்டத்தை மட்டும் துல்லியமாக கணிப்பது கடினம்.

PREV
16
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

மன்னார் வளைகுடா முதல் தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

26
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் நேற்று தனது எக்ஸ் தளத்தில்: ஜெர் ஸ்ட்ரீமில் (Jet Stream) ஏற்படும் வளைவு காரணமாக, மார்ச் 20 வரை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது மழைக்கான வாய்ப்புகள் உள் மாவட்டப் பகுதி முழுவதும் பரவியிருப்பதால், குறிப்பிட்ட ஒரே ஒரு மாவட்டத்தை மட்டும் துல்லியமாகக் கணித்துக் கூறுவது கடினம்.

36
கனமழை எச்சரிக்கை

கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வழித்தடத்திலும், அத்துடன் திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல் மற்றும் வேலூர் போன்ற அருகிலுள்ள மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதேபோல் கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி உள்ளிட்ட மேற்கு கொங்கு மண்டல மாவட்டங்களிலும் மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம். அதேபோன்று, விருதுநகர், தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கணித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

46
தமிழகம் முழுவதும் இடி மின்னலுடன் கனமழை

அதாவது தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. அதேபோல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நள்ளிரவில் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, அனகாபுதூர், தாம்பரம், போரூர், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் தமிழகம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

56
வறண்ட மாதத்தில் கனமழை

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் இன்று வெளியிடடுள்ள மற்றொரு பதிவு ஒன்றில்: சென்னையைச் சுற்றிலும் எத்தணை பரவலான மழை மேகங்கள். இறுதியாக, இதமான குளிர் காற்று வீசத் தொடங்கியுள்ளது. இன்று KTCC-க்கு (வடகிழக்குப் பருவமழைக்கு) ஒரு சிறப்பான நாளாக அமையும். மார்ச் மாதத்தில் கிடைக்கும் எந்தவொரு மழையையும் நாம் வரவேற்க வேண்டும்; ஏனெனில், இதுவே நமக்கு மிகவும் வறண்ட மாதமாகும். எனவே, லேசான மழைப் பொழிவாக இருந்தாலும் அதைக் கண்டு மகிழ்ச்சி கொள்வோம். சென்னை மட்டுமல்லாமல், வட மாவட்டங்கள் பலவற்றிலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல் சுற்று மழை பொழிந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

66
அடுத்த 3 மணிநேரம் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

இதனிடையே நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories