2021 சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்

Published : Mar 19, 2026, 06:50 AM IST

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் ஐ. பெரியசாமி வரலாற்றுச் சாதனை படைத்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் போன்ற முக்கிய தலைவர்களும் பெரும் வெற்றியைப் பதிவு செய்தனர். 

PREV
14
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல்

தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இம்முறை தவெக தலைவர் விஜய் வருகையால் நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. இந்நிலையில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியல், வரப்போகும் தேர்தலில் எந்தெந்த தொகுதிகள் நட்சத்திரத் தொகுதிகளாக மாறும் என்பதை பார்ப்போம்.

24
சாதனை வெற்றி படைத்த டாப் 10 வெற்றியாளர்கள்

கடந்த தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஐ. பெரியசாமி மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இவர் 1,65,809 வாக்குகளைப் பெற்று, 1,35,571 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளார். இது ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

அவரைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் எ.வ. வேலு (94,673 வாக்கு வித்தியாசம்) மற்றும் பூந்தமல்லியில் ஏ. கிருஷ்ணசாமி (94,110 வாக்கு வித்தியாசம்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

34
முக்கிய தலைவர்களின் பலம்

அதிமுக தரப்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தனது கோட்டையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

அதேபோல் திமுகவின் முக்கியத் தலைவர்களான கே.என். நேரு (திருச்சி) - 85,109 வாக்கு வித்தியாசத்திலும், தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் (கொளத்தூர்) 70,384 வாக்கு வித்தியாசத்திலும், உதயநிதி ஸ்டாலின் (சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி) 69,355 வாக்கு வித்தியாசத்தில் ஆகியோர் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். மேலும் தங்கம் தென்னரசு, கே. பொன்முடி ஆகியோரும் இந்த டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

44
2026-ல் எதிர்பார்ப்புகள்

இந்த புள்ளிவிவரங்கள் காட்டுவது என்னவென்றால், குறிப்பிட்ட சில தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கி மிகவும் வலுவாக உள்ளது. குறிப்பாக, பட்டியலில் உள்ள 10 பேரில் 9 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், 2026 தேர்தலில் புதிய அரசியல் கட்சிகளின் வருகை மற்றும் கூட்டணி மாற்றங்கள் இந்த வாக்கு வித்தியாசங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கடந்த முறை பல்லாயிரகணக்கான வாக்கு வித்தியாசம் காட்டிய இந்த தொகுதிகள், இந்த முறை மீண்டும் அதே சாதனையைத் தக்கவைக்குமா அல்லது சவால்களைச் சந்திக்குமா என்பதுதான் தற்போதைய அரசியல் விவாதமாக உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories