யாருடனும் சமரசம் இல்லை.. நான் மக்கள் டீம்.. கூட்டணிக்கு எண்ட் கார்டு போட்ட விஜய்.. அதிரடி அறிவிப்பு!

Published : Mar 18, 2026, 08:19 PM IST

கடைசியில் என்னதான் இந்த விஜய்யை பண்ணலாம் அப்படின்னு நினைக்கும்போதுதான் இங்க கூட்டணி, அந்த கூட்டணி சேர போறார்னு ஒரு பொய்யான பிரசாரத்தை செய்து கொண்டிருந்தார்கள் என்று விஜய் கூறியுள்ளார்.

PREV
14
என்டிஏ கூட்டணியில் விஜய் சேரப்போவதாக தகவல்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தவெகவும் தேர்தல் பணிகளில் பம்பரமாக சுழன்று வருகிறது. ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என தவெக கூறிய போதிலும் எந்த கட்சியும் கூட்டணி சேரவில்லை. காங்கிரஸ் கட்சி வரும் என எதிர்பார்த்தும் ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கிடையே விஜய், என்டிஏ கூட்டணியில் இணைய போவதாகவும், அவருக்கு துணை முதல்வர் பதவியும், எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவியும் வழங்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தகவல்கள் கூறின.

24
கூட்டணி இல்லை; உறுதி செய்த விஜய்

இதை உறுதிப்படுத்திய ஆதவ் அர்ஜூனா, என்டிஏ கூட்டணியில் சேர விஜய் முதல்வர் என ஆசைகாட்டினார்கள். ஆனால் தவெக தனித்து தான் போட்டியிடும் என்று தெரிவித்தார். இந்த நிலையில், யாருடனும் கூட்டணி சேரவில்லை. தவெக தனித்து தான் போட்டியிடும் என்று விஜய் உறுதிப்படுத்தியுள்ளார்.

வதந்திகள் பரப்பினார்கள்

இது தொடர்பாக மாமல்லபுரத்தில் தவெக சார்பில் நடந்த இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், ''அரசியலுக்கு வந்ததில் இருந்தே நம்மை பற்றி சில வதந்திகள், அந்த டீம், இந்த டீம் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர் எந்த டீமும் கிடையாது. மக்களுடைய டீம் அப்படின்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் வேற என்ன அவதூறு பரப்பலாம் இவர் மேல அப்படின்னு எல்லாமே முயற்சி செய்து அவர்களுக்கு வொர்க் அவுட் ஆகவில்லை.

34
சமரசம் செய்து கொள்ள மாட்டோம்

கடைசியில் என்னதான் இந்த விஜய்யை பண்ணலாம் அப்படின்னு நினைக்கும்போதுதான் இங்க கூட்டணி, அந்த கூட்டணி சேர போறார்னு ஒரு பொய்யான பிரசாரத்தை செய்து கொண்டிருந்தார்கள். இந்த நியூஸ்லாம் கேட்டு நீங்கள் கன்பியூஸ் ஆகி இருப்பீர்கள். ஆகவே நான் மறுபடி ஒரு விஷயத்தை ஓபனாக தெளிவாக சொல்கிறேன். நான், நாங்க எப்பவுமே மதசார்பற்ற கொள்கையிலும், சமூக நீதி என்ற நிலைப்பாட்டிலும் எப்பவும் சமரசம் வைத்துக் கொள்ளவே மாட்டோம்.

44
தவெக தலைமையில் ஆட்சி

நம்முடைய தலைமையில் தான் ஆட்சி என்பதில் எப்போதுமே உறுதியாக உள்ளோம். நம்முடைய முதல் மாநாட்டில் நான் சொன்னது மாதிரி, அரசியலில் நாம் யாருக்காவும், எதற்காகவும் சமசரம் செய்து கொள்ளப்போவதில்லை. அந்த பேச்சுவார்த்தையே கிடையாது. ஆகவே யார் என்ன அவதூறு பரப்புனாலும் தயவு செய்து அதை நம்பாதீர்கள். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நாம் நினைத்த இலக்கை நம்மால் நிச்சயமாக அடைய முடியும்'' என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories