தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.! அலறும் இபிஎஸ்! ஐகோர்ட்டில் பரபரப்பு மனு!

Published : Mar 18, 2026, 06:53 PM IST

Chennai High Court: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை விசாரணை கோரி திமுக மனு தாக்கல் செய்துள்ளது. 

PREV
15

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக திமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர், சி. காமராஜ், கே.சி. வீரமணி, கே.பி. அன்பழகன், எடப்பாடி பழனிசாமியின் உறவினர் சேலம் இளங்கோவன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா ஆகியோருக்கு எதிராக தனித் தனியாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

25

35

மேலும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தங்கமணி, கே.பி.அன்பழகன், காமராஜ், கே.சி. வீரமணி உள்ளிட்டோர் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 2016-2021 வரையிலான அதிமுக ஆட்சியில் தி.நகர் முன்னாள் எம்.எல்.ஏ.சத்யா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடு செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. சேலம் இளங்கோவன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு போன்றவற்றின் விசாரணையும் நிலுவையில் உள்ளது.

45

லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டால் மட்டுமே வழக்கை தொடர முடியும் என்று சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. ஊழல் குற்றத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது.

55

இது தொடர்பாக அமலாக்கத் துறைக்கு பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் இவர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ய முடியும். தற்போது மத்தியில் ஆளும் கட்சியுடன் அதிமுக கூட்டணியில் இருப்பதால், அரசியல் காரணங்களுக்காகவே அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன. தேர்தல் நெருங்கம் நேரத்தில் திமுக தாக்கல் செய்துள்ள மனு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories