சென்னையில் கொட்டித் தீர்த்த மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், இரவு நேரத்தில் மழையானது வெளுத்து வாங்குகிறது. அந்த வகையில் நேற்று இரவு 8 மணிக்கு சென்னையில் பெய்ய தொடங்கிய மழை இரவு முழுவதும் நீடித்தது. இதனால் சலையில் தண்ணீரானது தேங்கியது. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
rain alert
தென்மேற்கு பருவமழை
இந்தநிலையில் மழை தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை விமான நிலையத்தில் இதுவரை பெய்த தென்மேற்கு பருவமழையில் பெய்த மழையின் அளவை நேற்று பெய்த மழை முறியடித்துவிட்டது. அந்தவகையில், 1996ஆம் ஆண்டு 871 மி.மீ., 2023 ஆம் ஆண்டு 861 மி.மீ. இதுதான் மேற்கண்ட காலத்தில் 2ஆவது அதிக மழை அளவு என தெரிவித்துள்ளார். தென் சென்னையில் சோழிங்கநல்லூரில் 60 மி.மீ மழை பெய்துள்ளது. அண்ணாநகரில் 50 மி.மீ. மழை பெய்தது.
இன்று இரவும் மழை பெய்யுமா.?
தொடர் மழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்தால் சாத்தனூர் அணையில் முழு கொள்ளளவான 7.3 டிஎம்சி எட்டும். இதே போல வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி ஏரி அதன் கொள்ளளவான 3.3 டிஎம்சி எட்டும் என தெரிவித்துள்ளார்.
மழையானது நேற்று இரவு முழுவதும் பெய்த நிலையில் இன்று இரவும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று இரவு கிருஷ்ணகிரி முதல் சென்னை வரை உள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என தனது பதிவில் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்
இரவு முழுவதும் இடி மின்னலோடு கொட்டித்தீர்த்த மழை..! 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்