இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த மழை
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கமானது அதிகமாக காணப்பட்டாலும் மாலை நேரத்தில் மழையானது பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை இரவு முழுவதும் நீடித்தது. இடி, மின்னலோடு பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். அதே நேரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவியது
rain
விவசாயிகள் மகிழ்ச்சி
இதே போல திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இரவு முழுவதும் மழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
rain alert
வானிலை எச்சரிக்கை
மழை தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலட்சதீவு பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 25ம் தேதிதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்
Power Shutdown in Chennai: சென்னையில் இத்தனை இடங்களில் இன்று மின் தடையா.? உங்கள் பகுதியும் இருக்கா.?