ஆன்லைன் ஸ்டேட்டஸ் சரிபார்த்தல்
TNPDS இணையதளத்தில் உங்கள் விண்ணப்ப எண்ணைச் சமர்ப்பித்து, நிராகரிப்புக்கான காரணத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.ள்.
ஆவணங்களைச் சரிசெய்தல்
என்ன காரணத்திற்காக உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதோ, அதற்கான சரியான ஆவணத்தைத் தயார் செய்ய வேண்டும்.
வட்ட வழங்கல் அலுவலரை அணுகுதல்
உங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரை நேரில் சந்திக்க வேண்டும். அங்கு ஒரு முறையீட்டுக் கடிதத்துடன், சரியான ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மறுபதிவேற்றம்
சில நேரங்களில் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவே விடுபட்ட ஆவணங்களை மீண்டும் பதிவேற்றம் செய்து மறுபரிசீலனைக்கு அனுப்ப முடியும்.