வலையை விரித்து இரையைப் பிடிக்க நினைக்கிறார்கள்.! இனி உரிமைத் தொகை எனும் உருட்டு எடுபடாது! திமுகவை வச்சி செய்யும் நயினார்.!

Published : Dec 13, 2025, 07:35 AM IST

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை உருட்டு என கடுமையாக விமர்சித்துள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பணத்தாசை காட்டி பெண்களின் வாக்குகளை பெற திமுக முயற்சிப்பதாகவும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

PREV
13
திமுக செய்வது விளம்பர அரசியல்

தேர்தல் நெருங்கும் காலங்களில் அரசியலில் ஒரு விஷயம் தவறாமல் நடக்கும். மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் வாக்குறுதிகள், பணத்தாசை காட்டும் திட்டங்கள், “நாங்கதான் பெண்களுக்கு நல்லது செய்தோம்” என்ற விளம்பர அரசியல். அந்த வரிசையில்தான் தற்போது மகளிர் உரிமைத்தொகை விவகாரத்தை வைத்து திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.

23
உரிமைத் தொகை எனும் உருட்டு இனி எடுபடாது

“உரிமைத் தொகை எனும் உருட்டு இனி எடுபடாது” என்ற அவரது ஒரே வரி, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தலின்போது “அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000” என்று வாக்குறுதி அளித்தது யார்? ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு ஆண்டுகள் அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டது யார்? பின்னர் “தகுதியுள்ளவர்களுக்கு மட்டும்” என்று பாதி பெண்களை வெளியேற்றியது யார்? இப்போது தேர்தல் வாசலில் நின்று மீண்டும் 17 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை என அறிவிப்பது ஏன்? என்ற கேள்விகளை நேரடியாக முன்வைக்கிறார் நயினார்.

33
"இது நேரம் பார்த்த அறிவிப்பு என்பதில் சந்தேகம் இல்லை"

அரசியல் கணக்குப்படி பார்த்தால் இது நேரம் பார்த்த அறிவிப்பு என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த மாதம் வரை தகுதியற்றவர்கள் என கூறப்பட்ட பெண்கள், தேர்தல் நெருங்கியதும் திடீரென தகுதி பெற்றது எப்படி? சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பெண்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், பணம் கொடுத்தால் ஓட்டு கிடைத்துவிடும் என்ற எண்ணமா? என்கிறார் நயினார்.

“வலையை விரித்து இரையைப் பிடிப்பது போல, தேர்தல் நேரத்தில் பணத்தாசை காட்டி பெண்களை ஓட்டு வங்கியாக மாற்ற நினைப்பது அரசியல் நியாயமா?” என்ற அவரது கேள்வி, சாமானிய மக்களின் மனதில் ஏற்கனவே இருக்கும் சந்தேகத்தையே பிரதிபலிக்கிறது. பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, கல்வி, சட்டம் ஒழுங்கு போன்ற அடிப்படை பிரச்சினைகளில் தீர்வு இல்லாத நிலையில், வெறும் ரூ.1000 கொடுத்து “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என விழா எடுப்பது அரசியல் நாடகமே என அவர் சாடுகிறார்.

மொத்தத்தில், இந்த உரிமைத்தொகை விவகாரம் இனி வெறும் திட்டமாக இல்லாமல், திமுகவுக்கு எதிரான அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது. “உருட்டு இனி எடுபடாது” என்ற நயினார் நாகேந்திரனின் வார்த்தைகள், வரும் தேர்தலில் பெண்கள் வாக்குகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை அரசியல் களம் கூர்ந்து கவனித்து வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories