விஜய் சொன்ன அதே 40 ரூபாய் கமிஷன்.. டெல்டாவில் குமுறும் முதிய விவசாயி..கொடூர வீடியோ.. ஸ்கோர் செய்யும் தவெக

Published : Oct 18, 2025, 10:23 AM IST

தவெக தலைவர் விஜய், நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் வசூலிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். தற்போது, டெல்டா பகுதி விவசாயி ஒருவர் கண்ணீருடன் பேசும் வீடியோ வைராலகி வருகிறது.

PREV
13
டெல்டா விவசாயி வீடியோ வைரல்

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் தளபதி விஜய் ஏற்கனவே 40 கிலோ நெல் மூட்டைக்கு 40 ரூபாய் வசூலித்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு தற்போது ஒரு முதிய விவசாயியின் வீடியோ மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஏற்கனவே காவிரி டெல்டா பகுதியில் உள்ள ஒரு நெல் கொள்முதல் மையத்தில் பதிவான ஒரு வீடியோவில், 70 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் கண்ணீர் மல்க பேசுகிறார்.  

23
நெல் மூட்டைக்கு கமிஷன்

“நாங்கள் ராத்திரி பகலாக உழைச்சு நெல் விளைச்சிருக்கோம். ஆனா ஒவ்வொரு மூட்டைக்கும் 40 ரூபாய் கமிஷன் குடுக்கணும், இல்லேன்னா எடுப்பதில்லைன்னு சொல்றாங்க. இதை நாங்களே சொல்லி இருந்தா யாரும் நம்ப மாட்டாங்க. ஆனா விஜய் சொன்னது உண்மைதான்!” என்று அவர் கூறிய வீடியோ இணையத்தில் மின்னல் வேகத்தில் பரவியது. தற்போது வெளியாகி உள்ள வீடியோவில், ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் தருகிறோம். நாங்கள் கேட்கிற இடத்தில் 4 காகித்தை கொட்டக்கூடாதா? விவசாயிகளிடம் பணம் வாங்கிட்டு கொட்ட வேண்டியதுதானே? லாரி வந்து நெல்லை எடுக்க முடியாதுன்னு சொல்றாங்க. கேட்டால் ரோடு சரியில்லை என்று சொல்றாங்க. இதையெல்லாம் அரசு தான் பேசணும். முதலமைச்சர் பேசுறாங்க, அரசு சொல்றாங்க. பணம் கொடுத்தா தான் எடுப்போம் அப்படினு சொல்றாங்க. டோக்கன் போடமாட்றாங்க. இதையெல்லாம் எப்போ செய்ற வேலை இது. வர அதிகாரிகள் இதை செய்ய வேண்டியது தானே” என்று ஆதங்கமாக கூறுகிறார்.

33
நெல் கொள்முதல் நிலையம்

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே கோபத்தையும், அரசின் செயல்பாடு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தவெக தலைவர் விஜய், இந்தப் பிரச்சினையை முன்னரே எடுத்துரைத்திருந்தார். அவரது குற்றச்சாட்டு தற்போது உண்மையாகியுள்ளது. இது தொடர்பாக அரசு உரிய விசாரணை நடத்தி, விவசாயிகளுக்கு நியாயம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளின் உழைப்பை சுரண்டும் இத்தகைய முறைகேடுகளைத் தடுக்க, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரம், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க அரசு எவ்வாறு செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories