சர்ச்சையை கிளப்பிய விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை! அப்படி என்ன இருந்தது! ரத்து செய்த தமிழக அரசு!

First Published | Sep 5, 2024, 8:42 AM IST

Tamilnadu Government: விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி பள்ளிகளில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியதை ரத்து செய்யப்பட்டு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

School Student

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 7ம் தேதியான சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பள்ளிகளில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று  திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Tamilnadu Government

இதுதொடர்பாக சுற்றுச்சூழல் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள் / அமைப்பாளர்கள், செய்ய வேண்டிய / செய்யக்கூடாத பணிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வாயிலாக சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

Tap to resize

Vinayagar Chaturthi

மேலும்,  உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தென்மண்டலம்) வாயிலாக பெறப்படும் அறிவுறுத்தல்கள் பொதுமக்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் செய்தி வெளியீடு வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையானது, விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்கள் / அமைப்பாளர்கள், சிலை செய்வோர் மற்றும் பொதுமக்களுக்கு மட்டுமே உரிய அறிவுறுத்தல்கள் ஆகும். 

Circular canceled

மேற்காணும் சூழ்நிலையில், ஒரு சில மாவட்டங்களில் தவறான புரிதலின் அடிப்படையில் பள்ளிகளுக்கு மேற்கூறிய விழா தொடர்பாக அறிவுறுத்தல் / உறுதிமொழி குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இவ்வாறு பள்ளிகளுக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள், அரசின் ஆணைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதால், ஒரு சில மாவட்டங்களில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றது. மேலும், இவ்வாறு தவறான சுற்றறிக்கை அனுப்பியதற்கு பொறுப்பான அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!