TVK Vijay: தவெக தலைவர் விஜய் நாளை நாகப்பட்டினத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதனால் பாதுகாப்பு கருதி நாகையில் மின்தடை செய்யும்படி தவெக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை திருவாரூரிலும் விஜய் பிரசாரம் செய்கிறார்.
நடிகர் விஜய்யின் தவெக, தமிழக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. இதுவரை அறிக்கைகள் வாயிலாக மட்டும் அரசியலில் ஈடுபட்டு இருந்த நடிகர் விஜய், இப்போது தீவிர அரசியலில் களமிறங்கியுள்ளார். மதுரையில் 2 லட்சம் பேர் கூடிய பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டி மாஸ் காட்டிய விஜய், கடந்த வாரம் மலைக்கோட்டை நகரமான திருச்சியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
24
நாகை, திருவாரூரில் விஜய் பிரசாரம்
அப்போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கடுமையாக தாக்கி பேசினார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வாரம் சனிக்கிழமைதோறும் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். நாளை (சனிக்கிழமை) நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் விஜய் பிரசாரம் செய்ய இருக்கிறார். நாகையில் காலை 11 மணிக்கும், திருவாரூரில் மாலை 3 மணிக்கும் விஜய் பிரசாரம் செய்கிறார்.
34
தவெக தம்பிகளின் அட்ராசிட்டி
தவெக தலைவர் விஜய் எங்கு பிரசாரம் செய்தாலும் அல்லது பொது வெளியில் வந்தாலும் அலை அலையாக கூட்டம் கூடுகிறது. கடந்த வாரம் திருச்சியில் கூட கட்டுக்கடங்காத கூட்டம் வந்தது. என்னதான் கட்சி தலைமை உத்தரவிட்டாலும் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து வருவதை தவெக தம்பிகள் வழக்கமாக வைத்துள்ளனர். மேலும் ஒரு சில தவெக தம்பிகள் விஜய்யை பார்ப்பதற்காக மின் கம்பங்கள் மீதும் ஆபத்தான முறைகளில் ஏறுகின்றனர்.
தவெக சார்பில் மின்சாரத் துறைக்கு கோரிக்கை
இது அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தகூடியதாக இருப்பது மட்டுமின்றி கட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விடுகிறது. நாளை நாகையிலும் தவெக தொண்டர்கள் மின் கம்பங்களில் ஏறி விடுவார்கள் என்பதால் நாகையில் விஜய் வந்து பிரசராம் செய்து செல்லும் வரை மின்தடை செய்யும்படி மின்சாரத் துறைக்கு தவெக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொர்பாக தவெகவின் நாகை மாவட்ட கழகச் செயலாளர் சுகுமார், மின்வாரிய மேற்பொறியாளருக்கு அனுப்பிய மனுவில், 'எங்கள் கழகத் தலைவர் விஜய் வாஞ்சூர் ரவுண்டாணா, தொடங்கி நாகூர், தெற்கு பால்பண்ணைச்சேரி, வடகுடி சாலை வழியாக கிழக்கு கடற்கரை சாலையை அடைந்து அவ்வழியாக பரப்புரை செய்யயுள்ள புத்தூர் அண்ணாசிலை அருகில் வருகை புரிந்து மக்களை சந்தித்து உரையாற்றயுள்ளார்.
இவ்வழித்தடத்தில் உள்ள உயர் மின்னழுத்த கம்பி உள்ளதால் தளபதியின் விஜய்யின் நிகழ்வு தொடங்கி முடியும் வரை அவ்வழியில் உள்ள வழி தடங்களில் மின் நிறுத்தம் செய்து தரும்படிபயும் அல்லது மின் ஊழியர்களை நியமித்து பொதுமக்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.