கட்சியில் இணைந்த 63 நாட்களில்.. விஜயின் முன்னாள் மேலாளருக்கு முக்கிய பதவியை தூக்கிக் கொடுத்த ஸ்டாலின்

Published : Feb 11, 2026, 10:36 AM IST

PT Selvakumar: நடிகர் விஜயின் முன்னாள் மேலாளரான பி.டி.செல்வகுமார் மற்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுப்புரத்தினம், பாலகங்காதரன் ஆகியோர் சமீபத்தில் திமுகவில் இணைந்தனர். 

PREV
14
விஜயின் முன்னாள் மேலாளர்

விஜயின் மேலாளராக இருந்த பி.டி.செல்வகுமார். இவர் விஜயின் புலி திரைப்படத்தின் தயாரிப்பாளர். விஜய் நடித்த போக்கிரி, ஆதி, போக்கிரி, வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களுக்கு பி.ஆர்.ஓவாகவும் வேலை பார்த்துள்ளார். சுமார் 27 ஆண்டுகளாக விஜய்க்கு மேலாளராக செயல்பட்டு வந்தார். பின்னர் விஜய்யிடம் இருந்து விலகி கலப்பை மக்கள் இயக்கத்தை பி.டி.செல்வகுமார் நடத்தி வந்தார். அதுமட்டுமல்லாமல் விஜய்யை அவ்வப்போது விமர்சித்து வந்தார்.

24
திமுகவில் இணைந்த பி.டி.செல்வகுமார்

இதனையடுத்து பி.டி.செல்வகுமார் கலப்பை மக்கள் இயக்கத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் 100-க்கும் மேற்பட்டோருடன் பி.டி.செல்வகுமார் கடந்த டிசம்பர் 11ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து தவெக தலைவர் விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்தார். அதேபோல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுப்புரத்தினம் மற்றும் சிவகாசி பாலகங்காதரன் ஆகியோர் ஜனவரி 8ம் தேதி திமுகவில் இணைந்தனர்.

34
முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம்

இந்நிலையில் விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமாருக்கும், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து பின் திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புரத்தினம், பாலகங்காதரன் ஆகியோருக்கு திமுகவில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

44
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: திமுக செய்தித் தொடர்பு துணைத் தலைவராக ஏ.சுப்புரத்தினம், முன்னாள் எம்எல்ஏ (எச்–16, ஆர்.எம்.காலனி, திண்டுக்கல்)

திமுக வர்த்தகர் அணி துணைச் செயலாளர்களாக பி.டி.செல்வகுமார்(மணியா நகர், கொட்டாரம், கன்னியாகுமரி மாவட்டம்) ஜெ. பாலகங்காதரன். முன்னாள் எம்.எல்.ஏ., (1/98, ஆலமரத்துப்பட்டி, சிவகாசி, விருதுநகர் மாவட்டம்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories