ஸ்டாலின் அங்கிள்! விஜய் மீது போலீசில் புகார்! சமயம் பார்த்து பழிவாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?

Published : Aug 25, 2025, 08:00 PM IST

தவெக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என அழைத்த விஜய் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

PREV
15
Vijay vs DMK: Uncle Remark Row

தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரையில் நடந்து முடிந்துள்ளது. சுமார் 2 லட்சம் தொண்டர்க்ள் முன்னிலையில் ஆவேசமாக பேசிய தவெக தலைவர் விஜய், மத்தியில் ஆளும் பாஜகவையும், தமிழகத்தில் ஆளும் திமுகவையும் கடுமையாக தாக்கினார். குறிப்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சரியில்லை; பெண்களுக்கு பாதுகாப்பில்லை; எங்கும் ஊழல்; எதிலும் ஊழல் என்று திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் விமர்சித்தார்.

25
முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என அழைத்த விஜய்

மேலும் விஜய் தனது பேச்சின்போது நொடிக்கு ஒருமுறை ''ஸ்டாலின் அங்கிள், ஸ்டாலின் அங்கிள்'' என்று குறிப்பிட்டார். நீண்ட காலம் அரசியலில் இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினை விஜய் 'அங்கிள்' என மரியாதைக்குறைவாக பேசியதாக திமுகவினர் பொங்கியெழுந்தனர். ''அரசியலில் எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் மூத்த தலைவர்களுக்கு மரியாதை அளிப்பது வழக்கம். இதுதான் அரசியல் நாகரீகம். ஆனால் விஜய் கொஞ்சம் கூட அரசியல் நாகரீகம் இல்லாமல் ஒரு முதல்வரை அங்கிள் என அழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று திமுகவினர் தெரிவித்தனர்.

35
விஜய்யை தரக்குறைவாக பேசிய திமுக எம்.எல்.ஏ

விஜய்யின் இந்தப் பேச்சு, அவருக்கு அரசியல் அனுபவம் குறைவாக இருப்பதை காட்டுவதாக திமுகவின் மூத்த அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்து இருந்தார். தனது கட்சி தொண்டர்களை போன்று விசிலடிச்சான் குஞ்சுகள் போல் விஜய் பேசுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார். அதே வேளையில் திமுக எம்.எல்.ஏ சங்கர் முதல்வரை தரைக்குறைவாக பேசிய விஜய்யை நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் திரிஷாவுடன் தொடர்புபடுத்தி பேசியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

45
திமுகவினர் பேசாத பேச்சா?

அதே வேளையில், தவெகவினர் சிலர், ''எதிர்க்கட்சியினரை திமுக பேசாத பேச்சையே விஜய் பேசி விட்டார். திமுகவினர் எந்த அளவுக்கு கீழ்த்தரமாக பேசினார்கள் என்பதற்கு பெரிய லிஸ்ட்டே உள்ளது''என்று திமுகவினருக்கு பதிலடி கொடுத்தனர். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என கூறிய விஜய் மீது திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தவெக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசியதாகவும், தவெக மாநாட்டில் பவுன்சர்கள் மனிதாபிமானம் இல்லாமல் கட்சியினரை தூக்கி எறிந்ததாகவும் வழக்கறிஞர் சிவசாகர் என்பவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

55
பழிவாங்கத் துடிக்கும் திமுக?

இந்த புகாரை ஏற்று விஜய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் விஜய் தொடர்ந்து விமர்சித்து வருவதால் திமுக அவரை சமயம் பார்த்து பழிவாங்கத் துடிக்க காத்து கொண்டிருக்கிறது. ஆகையால் இப்போது இநத பிரச்சனையை கையில் எடுத்து போலீசில் புகார் கொடுக்க வைத்து வருகிறது என்று தவெகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories