தொடர் விடுமுறை.. கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கூடியதா.? குறைந்ததா.? விலை நிலவரம் என்ன.?

First Published Jan 17, 2024, 8:15 AM IST

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையானது மந்தமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக கய்கறிகளின் விலையில் எந்தவித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

வெங்காயம் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம்,  ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,  சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,  பச்சை மிளகாய் ஒரு கிலோ 35க்கும்,  பீட்ரூட்  40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு  35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சுரைக்காய் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும்,  கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,  முட்டைக்கோஸ் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும்,  அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும்,  சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Latest Videos


முருங்கைக்காய் விலை என்ன.?

கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும்,  கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,  பீன்ஸ் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

Vegetables Price Today

வெண்டைக்காய் விலை என்ன.?

இஞ்சி ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், பச்சை பட்டாணி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும்,  மாங்காய் ஒரு கிலோ 170 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. ரயில் இத்தனை மணி நேரம் தாமதமா? ரீபண்ட் கண்டிப்பா கிடைக்கும்!

click me!