அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேனி மாவட்டத்திற்கு வருகை தரும் நிலையில், அதிமுகவிலிருந்து நீண்டகாலம் பணியாற்றிய ஒன்றிய செயலாளர் மோகன் ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.
25
Vattalagundu Union Secretary
திண்டுக்கல் மாவட்டம் எம்.வாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மோகன். இவர் கடந்த 25 ஆண்டுகளாக மேலாக அதிமுக வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளராகவும் தற்போது பிரிக்கப்பட்ட கிழக்கு ஒன்றிய செயலாளராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின் அதிமுக உடைந்த போது இவரது மகன் அருண்குமார் ஓபிஎஸ் அணியிலும், இவர் எடப்பாடி பழனிசாமி அணியிலும் செயல்பட்டு வந்தார்.
35
O. Panneerselvam
இந்நிலையில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன் ஓபிஎஸ் அணியில் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனையடுத்து அவர் அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
45
Edappadi Palanisamy
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டுள்ளார்.
55
AIADMK
ஆகையால் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், வத்தலகுண்டு கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் R.மோகன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.