நான் மட்டும் ஆட்சியில் இருந்தா புடிச்சு வெட்டி விட்டிருவேன்! பாலியல் குற்றங்கள் குறித்து அன்புமணி ஆவேசம்!

Published : Mar 02, 2025, 03:11 PM ISTUpdated : Mar 02, 2025, 03:55 PM IST

தமிழகத்தில் பெண்கள், குறிப்பாக பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். 

PREV
16
நான் மட்டும் ஆட்சியில் இருந்தா புடிச்சு வெட்டி விட்டிருவேன்! பாலியல் குற்றங்கள் குறித்து அன்புமணி ஆவேசம்!

பாலியல் குற்றவாளிகளுக்கு எந்த பயமும் இல்லை. நான் மட்டும் ஆட்சியில் இருந்தேன் என்றால். இவனுகளை வேற மாதிரி பண்ணிவிடுவோம் என அன்புமணி கொந்தளித்துள்ளார். 

26
Crime Against Women

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்கள் மற்றும் குறிப்பாக பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. டிவி மற்றும் செய்திதாளை திருப்பினாலே பாலியல் குற்றம் தொடர்பாக செய்தியே அதிகளவில் காணப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 

36
Anbumani Ramadoss

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் உள்ள ஆர்.கே.பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் பா.விஜயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.

46
Rape

அதன் பிறகு அங்கு கட்சி கொடி ஏற்றி வைத்து கட்சி நிர்வாகிகளிடம் உரையாற்றுகையில்: தமிழ்நாட்டில் சட்டமும் கிடையாது சட்ட ஒழுங்கும் கிடையாது. பெண்கள் எங்கும் பாதுகாப்பாக தனியாக செல்ல முடியாத சூழல் உள்ளது. தினமும் செய்தித்தாள்களில் பார்த்து கொண்டிருக்கிறோம். 5 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறது. அந்த மிருகத்தை நாம் என்ன செய்யலாம்? பொதுமக்கள் சொல்வதை போல கொன்றுவிட வேண்டும். அவ்வளவு ஆத்திரம் வருகிறது.

56
Gang Rape

8 பேர் சேர்ந்து ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்கின்றனர். 7 பேர் சேர்ந்து ஒரு கல்லூரி பெண்ணை கற்பழிக்கின்றனர். இது நான் நினைத்தேன் பீகார், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில்தான் இப்படி நடக்கும் என நினைக்கிறோம். ஆனால் நம் தமிழ்நாட்டில் தான் இப்படி நடக்கிறது. இதை எல்லாம் நடக்க விடனுமா? நடக்க விட முடியுமா? இந்த பாலியல் குற்றவாளிகளுக்கு எந்த பயமும் இல்லை. 

66
CM Stalin

நான் மட்டும் ஆட்சியில் இருந்தேன் என்றால். இவனுகளை வேற மாதிரி பண்ணிவிடுவோம். வெட்டி விடுவோம். அதற்குப் பின்னர் இப்படி எவனாவது செய்வானா? அய்யய்யோ இந்த ஆட்சியில் வெட்டி விடுவாங்க என்ற பயம் இருக்கும். ஆனால் இப்ப பயமே இல்லை. இந்த சம்பவங்கள் ஏன் நடைபெறுகிறது தெரியுமா? தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை மாத்திரைகள், கஞ்சா மற்றும் மது விற்பனை நடைபெறுகிறது, இதற்கெல்லாம் காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் என அன்புமணி ஆவேசமாக பேசியுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories