விரைவில் அறிவிப்பு
இது தொடர்பாக தமிழக எம்.பி.க்களும் ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு மொத்தம் 600 கிமீ தூரம் உள்ளது. இப்போது சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் 'சேது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்' ரயில் 10.25 மணி நேரங்களில் ராமேஸ்வரம் சென்றடைகிறது.
எந்தெந்த இடங்களில் நிற்கும்?
அதே வேளையில் வந்தே பாரத் மணிக்கு 160 கிமீ வேகத்தில் அதிவேகமாக செல்லக்கூடியது என்பதால் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு 8 அல்லது 8.30 மணி நேரங்களில் சென்று விடும். வந்தே பாரத் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம், மண்டபம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற வந்தே பாரத் ரயில்களை போல் இதிலும் 7 ஏசி சேர் கார், 1 எக்ஸிக்யூடிவ் சேர் கார் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.