தவெக.வால் மட்டும் திமுக.வை வீழ்த்திவிட முடியுமா..? விஜய்யின் பேச்சால் கடுப்பான வானதி சீனிவாசன்

Published : Sep 24, 2025, 08:31 AM IST

Vanathi Srinivasan: திமுக.வை பாஜக, அதிமுக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியால் மட்டும் தான் வீழ்த்த முடியும் என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

PREV
16
குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதம்

கோவை கணபதி பகுதியில் மக்கள் சேவை மையம் சார்பில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டடமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் அதிகமாக பயன்பாட்டில் உள்ள பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.

26
வரி குறைப்பால் அதிகரிக்கும் நாட்டின் வளர்ச்சி

இதன்மூலம் வியாபாரம், பொருளாதாரம் வளரும். உலக அளவில் உள்ள நிதி நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி குறைப்பால் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் என கணித்துள்ளன. வரி குறைப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறோம். வரி குறைப்பை செய்யாமல் சில நிறுவனங்கள் ஒரே விலையில் விற்க வாய்ப்பு உள்ளது. வரி குறைப்பு பயன் வந்துள்ளதா என பொதுமக்கள் உறுதி செய்துகொள் வேண்டும்.

36
விலை வித்தியாசத்தை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்

வியாபார நிறுவனங்கள் விலை வித்யாச பட்டியலை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். வரி குறைப்பினால் உற்பத்தி பெருகும். மக்களின் வாங்கும் தன்மை அதிகரிக்கும். ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு மீண்டும் ஆட்சியமைத்த பெருமை மோடிக்கு தான் உண்டு. மக்களுக்கு உதவி செய்ய மிகப்பெரிய வரி சீர்திருத்தத்தை கொண்டு வந்துள்ளார். வரி குறைப்பால் தீபாவளிக்கு மிச்சம் பண்ணும் பணத்தினால், பெண்கள் இரண்டு சேலைகளை வாங்க முடியும். ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை விரைவாக செய்து தந்த மத்திய நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். ஜிஎஸ்டி வரி குறைப்பை அமல்படுத்துவதை மாநில அரசுதான் செய்ய வேண்டும். இது குறித்து முதலமைச்சர் பேசாமல் வேடிக்கை பார்க்கிறார்.

46
வரியே வேண்டாம் என்றால் அரசை எப்படி நடத்துவது

கடந்த காலங்களில் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரித்ததால் தான், 12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்க முடிந்தது. உள்கட்டமைப்பு வசதிகளை விரைவாக செயல்படுத்தினோம். காங்கிரஸ் போல ஊழல் குற்றச்சாட்டு இல்லை. காங்கிரஸ் எந்தெந்த துறையில் வருமானம் பார்ப்பது என்பது போலில்லாமல், ஜிஎஸ்டி வருமானத்தை திரும்ப மக்களுக்கே தருகிறோம். வரியே வேண்டாம் என்றால் அரசை எப்படி நடத்துவது? வரி கட்டுவது பெருமை என்ற நிலையை மோடி கொண்டு வந்துள்ளார். மக்கள் தரும் வரி, பல்வேறு திட்டங்களாக வருகிறது.

56
திமுக.வை வீழ்த்தும் விஜய்..?

சமூக வலைதளங்களில் அரைகுறை அறிவோடு போடும், கமெண்ட்களை நான் கண்டு கொள்வதில்லை. ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரிக்க அதிகரிக்க, ஜிஎஸ்டிக்குள் வராத மற்ற பொருட்கள் கொண்டு வரப்படும். மாநில அரசு ஒத்துழைப்பு தந்தால் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவோம். அண்ணாமலை - டிடிவி தினகரன் சந்திப்பு பற்றிய தகவல் எனக்கு தெரியாது. திமுகவிற்கும், தவெகவிற்கும் தான் போட்டி என விஜய்தான் கூறுகிறார். திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி தேசிய ஜனநாயக கூட்டணிதான்.

66
திமுக.வை வீழ்த்தும் ஒரே சக்தி NDA தான்

திமுகவை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணியால் தான் வெற்றி பெற முடியும். பாஜகவில் எந்த கோஷ்டி புசலும் இல்லை. கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என்பதுதான் தலைமை கூறியுள்ள விஷயம். அதனை பலவீனப்படுத்தும் செயல்களை யாரும் செய்யக்கூடாது. அண்ணாமலை கூட்டணியை பலப்படுத்த அவரது முயற்சிகளை செய்கிறார்.‌ கல்வி நிதியை வைத்து திமுக தான் அரசியல் செய்கிறது" இவ்வாறு அவர் கூறினார்.

Read more Photos on
click me!

Recommended Stories